அபார சாதனை.. டிஆர்டிஓவுக்கு ராகுல் பாராட்டு... மோடிக்கு உலக நாடக தின நல் வாழ்த்துகள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடிக்கு உலக நாடக தின நல் வாழ்த்துகள் கூறிய ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: பூமிக்கு மேலே செயற்கைக் கோளை தாக்கி அழித்து சாதனை படைத்தமைக்காக மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துக்களையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த இரண்டையும் ஒரே டிவீட்டில் போட்டு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

    Rahul Gandhi wishes Modi on World Theatre day

    இன்று காலை 10 மணிக்கு மேல் நாடே பெரும் பரபரப்பாகி விட்டது. 11.45 டூ 12 மணிக்குள் உங்களிடம் பேசப் போகிறேன், ஒரு முக்கியமான சேதி சொல்லப் போறேன் என்று கூறி டிவீட் போட்டார் பிரதமர் மோடி. உடனே நாடு பரபரப்பாகி விட்டது. ஆஹா. .என்ன செய்யப் போறாரோ, என்ன சொல்லப் போறாரோ, மறுபடியும் ரூபாய் ஒழிப்பா, ஏதாவது பெரிய தீவிரவாத தலைவனை போட்டுத் தள்ளி விட்டதா இந்தியா, அணு ஆயுத சோதனை ஏதாவது நடந்திருக்கிறதா என்று கற்பனைகள் ரெக்கை கட்டிப் பறந்தன.

    ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக வேறு சேதி சொன்னார் பிரதமர். அதாவது பூமிக்கு மேலே 300 கிலோமீட்டர் தொலைவில் சிறிய ரக செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் தாக்கி அழித்து இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் அறிவித்தார். இந்திய விஞ்ஞானிகளின் சாதனை இது. எதையோ எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பதட்டத்தைப் போக்கி நிம்மதியைக் கொடுத்தது.

    அதேசமயம், மோடியைக் கிண்டலடித்து மீம்ஸ்கள் பறந்து வருகின்றன. பெரிய பில்டப் கொடுத்தது இதற்குத்தானா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தியும் இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.

    அதில்

    வெல்டன் டிஆர்டிஓ. உங்களது பணியால் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலக நாடக தின நல் வாழ்த்துகள் என்று கூறி அதிர வைத்துள்ளார் ராகுல் காந்தி.

    இன்று உலக நாடக தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+