அமலாக்கத்துறை இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்.. 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி.. யார் இவர்?
டெல்லி: அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநராக பொறுப்பு வகித்து வரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ராகுல் நவின், அமலாக்கத்துறையின் புதிய முழுநேர இயக்குநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ED இயக்குநர் பதவியில் இருப்பார்.
சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இயக்குநராக பதவியில் இருந்து வந்தார். அவரது பதவி நீட்டிப்புக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவால் அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி விலகினார்.

ராகுல் நவீன் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநராகச் செயல்படுவார்.
1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) கேடர் அதிகாரியான ராகுல் நவீன், 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டவர். அந்தத் துறையின் சீனியர் அதிகாரியாகவும் உள்ளார். இந்திய வருவாய்த்துறையின் கூடுதல் அதிகாரியாகப் பணியாற்றியவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications