வடக்கே வதைக்கும் குளிர்- கண்டெய்னர்களில் ஹீட்டர்கள்- ராகுல் யாத்திரைக்கு ஒரு வாரம் ரெஸ்ட்
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரைக்கு ஒரு வாரம் ஓய்வு விடப்பட்டுள்ளது. பாதயாத்திரையில் பங்கேற்றவர்களின் கண்டெய்னர்களில் ஏசிக்கு பதில் ஹீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலை முன்வைத்து இந்தியா ஒருங்கிணைக்கும் ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ல் தமிழகத்தில் தொடங்கினார் ராகுல் காந்தி. இந்த யாத்திரையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது சுமார் 2,000க்கும் அதிகமான கிலோ மீட்டர் கடந்து 100நாட்களை தாண்டி டெல்லியை சென்றடைந்துள்ளது இந்த யாத்திரை. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹசனும் இந்தப் பேரணியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ராகுல் யாத்திரைக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடும் குளிர்வாட்டி வதைக்கிறது. இதனால் ராகுலுடன் வரும் கண்டெய்னர்களில் தங்குவம் தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து கண்டெய்னர்களில் ஹீட்டர்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கண்டெய்னர்கள் சீரமைக்கப்பட்ட பின்னர் வரும் 1-ந் தேதி முதல் இந்த யாத்திரை மீண்டும் தொடங்கும். டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் செல்கிறது ராகுல் காந்தி யாத்திர. அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்கிறது. ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி தமது பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த பயணத்தின் போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கடுமையாக தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி. வட இந்தியாவில் இந்தி பெல்ட்டான ராஜஸ்தானில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் ராகுல் காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications