ரயில் பயணங்களில் இலவச ஓடிடி.. இந்தியன் ரயில்வே கொடுக்கும் கலக்கல் ஆஃபர்.. யூஸ் செய்வது எப்படி?
டெல்லி: ரயில் பயணத்தின்போது பெரும்பாலும் பொழுதைக் கழிக்க எதுவும் இருக்காது. ஆனால், இனிமேல் நமக்கு இந்த பிரச்சனை இருக்காது. இதற்காகவே இந்திய ரயில்வே இப்போது ரயில் பணிகளுக்கு அட்டகாசமான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நமது ரயில் பயணத்தை மேலும் இனிமையானதாக மாற்றும். இது குறித்து விரிவாக பார்க்காலம்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வேயில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த ரயில்வே துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பக்கம் வந்தே பாரத் உள்ளிட்ட அதிநவீன ரயில்கள் வருகிறது. மற்றொரு பக்கம் டிக்கெட் புக்கிங்கிலும் அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

புதிய வசதி
இதற்கிடையே ரயில்களில் பயணிகள் ஜாலியாக பயணிக்கும் வகையில் ரயில்வே துறை அட்டகாசமான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது இந்திய ரயில்வேயின் புதிய செயலியான "ரயில் ஒன்" மூலம் நாம் பயணத்தின்போது இலவசமாக ஓடிடி செயலிகளைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தச் செயலி மூலம் பயணிகள் படங்கள், வெப் சீரிஸ்கள், ஆவணப்படங்கள் மற்றும் பாட்கஸ்களை பார்க்கலாம்.
ரயில் ஒன்
கடந்த ஜூலை மாதம் "ரயில் ஒன்" செயலியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. அதாவது முன்பு ரயில்வேயில் புக்கிங் செய்ய ஒரு செயலி, ரயில் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கத் தனிச் செயலி, முன்பதிவு இல்லாத டிக்கெட்களை எடுக்கத் தனிச் செயலி என்று பல்வேறு செயலிகள் இருந்தன. இது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதற்குப் பதிலாக அனைத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ரயில்வே துறை இந்த ரயில் ஒன் செயல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியைப் பயன்படுத்த ஈஸியாக இருப்பதால் மக்கள் பலரும் இதை விரும்பி பயன்படுத்தினர். இந்த ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத யுடிஎஸ் டிக்கெட்டுகள், ரயில் கண்காணிப்பு, குறை தீர்க்கும் வசதி, இ-கேட்டரிங், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து டாக்ஸி சேவை என அனைத்தையும் ஒரே செயலியில் பயன்படுத்தலாம்.
ஓடிடி
இதற்காக ரயில் ஒன் செயலி வேவ்ஸ் (WAVES) ஓடிடி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசின் பிரசார் பாரதியால் கடந்த 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில் 10+ மொழிகளின் கண்டெண்டுகள் உள்ளன. இந்த ஒரே ஓடிடி தளத்தில் நாம் லைவ் டிவி, வீடியோக்கள், ஆடியோ, கேமிங் என அனைத்தையும் பார்க்கலாம்.
யூஸ் செய்வது எப்படி?
முதலில் இதற்கு ரயில் ஒன் செயலியில் mPIN அல்லது பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள். லாகின் செய்த பிறகு, "More Offerings" என்ற பிரிவில் உள்ள "கோ டூ வேவ்ஸ்" (Go To Waves) என்ற இடத்திற்குச் செல்லுங்கள். உங்கள் மொபைலில் ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும். அங்குத் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட இலவச ஓடிடிகளை ரசிக்கலாம்.
அதேநேரம் நம்மில் பலருக்கும் இன்னொரு சந்தேகம் இருக்கும். ரயில் ஒன் செயலி வந்துவிட்டதால் பழைய ஐஆர்சிடிசி செயலியில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியுமா என்ற டவுட் பலருக்கும் இருந்தது. ஆனால், புதிய செயலி வந்தாலும் கூட இன்னுமே பழைய செயலியிலும் நாம் டிக்கெட்களை புக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications