‛‛உங்களை விட்டு போகமாட்டேன்..’’ காங்கிரஸ் தலைவர் பதவியை விரும்பாத அசோக் கெலாட்? பகீர் தகவல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியின் குடும்பத்தினர் ஆதரவுடன் ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விரும்பவில்லை எனவும், அவர் ராஜஸ்தான் முதல்வராக தொடர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபறெ உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என அந்த கட்சியினர் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.

அசோக் கெலாட்-சசீதரூர் மோத வாய்ப்பு
இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் போட்டியிட்டால் ஒருமனதாக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ராஜஸ்தான் முதல் அமைச்சரான அசோக் கெலாட்டை நியமிக்க சோனியா காந்திய ன் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் ஜி23 தலைவர்களில் ஒருவராக உள்ள எம்பி சசீதரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில நாட்களாக முன்பு சோனியா காந்தி, சசீதரூரை அழைத்து பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிட அவருக்கு சோனியா காந்தி பச்சை கொடி காட்டியதாக கூறப்படுகிறது.

அசோக் கெலாட்டுக்கு வெற்றி வாய்ப்பு
இதனால் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி என்பது அசோக் கெலாட்- சசிதரூர் இடையே நிலவலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அசோக் கெலாட் தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சோனியா காந்தியின் ஆதரவுடன் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கி வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.

எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
இந்நிலையில் தான் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வராக நீடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதனை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தி உள்ளார். அதாவது நேற்று அசோக் கெலாட் ராஜஸ்தானில் தனது கட்சி எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அசோக் கெலாட் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிரந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை விரும்பாத கெலாட்
இந்த கூட்டத்தில், ‛‛நான் கட்சி தலைவர் பதவிக்கு நாமினேசன் செய்தாலும் கூட உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்'' என கூறியுள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டால் ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படும் நிலையில் அசோக் கெலாட் இப்படி கூறியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் கேரளாவில் உள்ள நிலையில் இந்த கூட்டம் நடந்தது. இதன்மூலம் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க அசோக் கெலாட் விரும்பவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு










Click it and Unblock the Notifications