ராஜஸ்தானை தக்கவைக்கும் காங்கிரஸ்.. ஆனா பின்னாலேயே வரும் பாஜக.. கெலாட்டிற்கு விழுந்த செக்! புது சர்வே
டெல்லி: இன்னும் சில மாதங்களில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன. லோக்சபா தேர்தலுக்கு முன்பு இந்தாண்டு இறுதியில் 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலுக்கு இந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
5 மாநில தேர்தல்: கர்நாடக தேர்தலில் பெற்ற இமாலய வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலைக் காங்கிரஸ் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. இந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதேபோல சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இதனால் இந்த 5 மாநில தேர்தலைக் காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஐஏஎன்எஸ்-போல்ஸ்ட்ராட் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 13 வரை ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
யார் முன்னிலை: 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு 108 இடங்கள் இருக்கிறது. அதேபோல பாஜகவுக்கு 70 இடங்கள் உள்ளன. இதற்கிடையே வரும் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்றே இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 97-105 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 89-97 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குக் கடந்தாண்டு கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக 2 சதவீத வாக்குகள் கிடைக்கும்.. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவுக்கு அதை விட ஒரு சதவிகிதம் குறைவாக அதாவது 40 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது
கெலாட்டிற்கு ஆதரவு: முதல்வர் வேட்பாளர் குறித்த சர்வே-இல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் 37.9 சதவீத ஆதரவுடன் முதல்வர் வேட்பாளர் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பாஜகவின் வசுந்தரா ராஜே 25.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸின் சச்சின் பைலட் 25.4 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
மேலும், அசோக் கெலாட் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு 47.8 சதவீதம் பேர் கெலாட் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். மேலும், 34.9 சதவீதம் பேர் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்சினையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மின்சாரம், மின்சாரம், சாலை உட்கட்டமைப்பு வசதிகள் பெரிய பிரச்சினை என 19.7 சதவீதம் பேரும் விவசாயிகளின் சிக்கல் தான் பெரிய பிரச்சினை என 13.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications