பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பு தொடர்ந்து இந்தியாவில் நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படி தான் ராஜஸ்தான் மாநிலத்திலும் ரயில் தண்டவாளத்தை தகர்க்கும் நாசவேலையில் இறங்கியது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் உடன் தொடர்புடைய இருவரை இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் தண்டவாளம் தேசமடைந்தாலும் கூட நல்வாய்ப்பாக வேறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rajasthan Railway Track Blast

இருவர் கைது

இதில் பஞ்சாபை சேர்ந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் படை, ஸ்ரீ கங்காநகர் போலீசார் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி ஆபரேஷனில் மகக்தீப் கவுர் (21), தேவேந்தர் சிங் (22) ஆகியோர் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தொடர்பு

கைது செய்யப்பட்ட மகக்தீப் கவுர், பாகிஸ்தானில் இருக்கும் இரண்டு நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இவர்களை இயக்கியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. இருப்பினும் ஒருவர் 'சாச்சா' என்றும் மற்றொருவர் 'ஷா' என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் காதலிப்பது போல பேசி மூளைச்சலவை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பணம் கொடுத்து அந்த பெண்ணை தங்கள் வலையில் சிக்க வைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தனியாக வசிக்கும் அல்லது குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை குறிவைக்கிறார்கள். அவர்களிடம் பாசமாக பேசுவது போல பேசி தங்கள் வலையில் சிக்க வைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் கங்காநகரை சேர்ந்த பபிதா என்ற பெண்ணை இதேபோன்ற முறையில் ஐஎஸ்ஐ பயன்படுத்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.

காதல் வலை

இந்த சம்பவத்தில் சிக்கிய மகக்தீப் கவுரும் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவரது கணவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். அவரது சூழலை தெரிந்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த நபர்கள் அவருடன் காதலிப்பது போல பேசி, பணம் கொடுத்து தங்களுக்கு வேண்டியதை செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைப்பதற்காக அந்த பெண்ணுக்குப் பணம் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு ஆயுதங்கள், 46 தோட்டாக்கள் மற்றும் ரூ.30,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணை

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இந்த இருவரை தவிர மேலும் மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்குவதற்கு இடம், மோட்டார் சைக்கிள் மற்றும் சம்பவ இடத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

என்ன நடந்தது

கடந்த நவம்பர் 3ம் தேதி இரவு சுமார் 9.45 மணியளவில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ராம்சிங்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதில் ரயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டதுடன், சுமார் இரண்டரை அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து நிகழ்வதற்கு சுமார் 75 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்கர் - சூரத்கர் பயணிகள் ரயில் அதே தண்டவாளத்தில் சென்றுள்ளது.

அதன் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், இந்த சதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியவும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+