அதிரடி மாற்றத்திற்கு தயார்.. ரஜினியை சந்திக்க காத்திருக்கும் அதிமுக தலைகள்.. விரைவில் ஆலோசனை!
நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அதிமுக தலைவர்கள் பலர் காத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
டெல்லி: நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அதிமுக தலைவர்கள் பலர் காத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. அதிமுகவில் லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து பல அதிரடி மாற்றங்கள் நடக்க இருப்பதாக செய்திகள் வருகிறது.
பாஜக கட்சி தென்னிந்திய மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க, ஆபரேஷன் ராவணா என்ற திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் பெரிய நபர்களை, நடிகர்களை கட்சிக்குள் இழுத்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
ஆனால் தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்த திட்டம் வேலை செய்யவில்லை. மாறாக தமிழகத்தில், ரஜினிகாந்தை வைத்து பாஜக இந்த திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

என்ன திட்டம்
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2011 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அப்போதும் அதிமுக பாஜக பெரிய கூட்டணி அமைத்து திமுகவிற்கு எதிராக போட்டியிட உள்ளது. ஆனால் அதிமுகவில் அதற்குள் நிறைய மாற்றங்கள் செய்யப்படும், நிறைய பதவிகள் மாற்றப்படும் என்று செய்திகள் வருகிறது.

எப்படி மாற்றம்
அதன்படி அதிமுகவில் சரியான தலைமையை கொண்டு வர அக்கட்சியினர் முடிவெடுத்து இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் கட்சியை சரியாக வழி நடத்தினாலும் கூட அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. மிக முக்கியமாக, பாஜக உதவி மட்டும் இல்லையென்றால் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.

இதனால் ரஜினி
இதனால் தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் சில அதிமுக தலைவர்கள் பேச இருப்பதாக செய்திகள் வருகிறது. பாஜகவின் ஆபரேஷன் ராவணாபடி, அதிமுகவிற்கு விரைவில் நடிகர் ஒருவர் தலைமை ஏற்பார் என்று கூறுகிறார்கள் . இந்த நிலையில்தான் அதிமுகவில் சில தலைவர்கள் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செய்திகள் வருகிறது.

ஏற்கனவே இப்படி இருந்தது
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, அதிமுக தலைவர்களுடன் ரஜினிகாந்த் போனில் பேசினார். 2021 தேர்தலில் திமுகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக ரஜினிகாந்த் அதிமுகவிற்கு வந்தால் மட்டுமே முடியும் என்று கூறுகிறார்கள். அதனால்தான் தற்போது அதிமுகவில் சிலர் ரஜினியுடன் பேச முடிவெடுத்து காத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இல்லை
ஆனால் அதிமுகவை மிக இக்கட்டான சூழ்நிலையில் கூட ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து காத்தனர். அதனால் அவர்களே கட்சியை வழி நடத்த சரியானவர்கள். ரஜினி எல்லாம் வந்துதான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது, என்று அதிமுகவில் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications