பேரறிவாளனை தொடர்ந்து.. மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு.. வழக்கறிஞர் சொன்னது என்ன?
டெல்லி: பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில்தான் நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனையோடு இருக்கும் 7 பேரில் முதல் முதலாக ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டி
இந்த வழக்கில் பேரறிவாளன் சார்பில் சங்கரநாராயணன் ஆஜர் ஆனார். இதையடுத்து பேரறிவாளனின் இன்னொரு வழக்கறிஞர் பிரபு இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இன்று பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது . தமிழ்நாடு அரசு இதில் நடுநிலையோடு வாதம் வைத்தது. காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோபால் கோட்ஸேவிற்கே கருணை கொடுக்கப்பட்டது. இதில் மாநில அரசுக்கே முழு உரிமை உள்ளது. ஆனால் இந்த வழக்கில் மத்திய அரசு சட்டத்தையே மாற்ற பார்க்கிறது. இது தவறு என்று வாதம் வைத்தது.

என்ன சொன்னார்
இறுதி விசாரணை முடியும் வரை ஜாமீனில் இருக்கட்டும் என்று கோர்ட் கூறியுள்ளது. கவர்னர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இதை ஏற்றுக்கொண்டு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 7 பேருக்கும் எதிரான வழக்கு ஒரே மாதிரியானது என்பதால் அவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு - பேரறிவாளன் வழக்கறிஞர் சங்கரநாராயணன்

7 பேருக்கும் பொருந்தும்
7 பேருக்கும் இது பொருந்த கூடியது. ஆனால் மற்ற 6 பேரும் இந்த வழக்கில் தனியாக மனு போட வேண்டும். ஆனாலும் அதற்கு தேவை இருக்காது என்று நினைக்கிறன். இந்த வழக்கில் இறுதி விசாரணை அடுத்த மாதமே வைத்து உள்ளனர். அதில் மொத்தமாக 7 பேருக்கும் பெயில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக ஒரே உத்தரவு வரும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசின் அமைச்சரவை முடிவை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்.
Recommended Video

மாநில அரசு
மாநில அரசின் அமைச்சரவை முடிவை ஆளுநர் மதிக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று இன்று நீதிபதிகளே கேட்டனர்.இன்று மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எங்களுக்குத்தான் இதில் பெயில் வழங்கவோ, விடுதலை செய்யவோ உரிமை இருக்கிறது என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர். அவர்களின் வாதம் எதையும் நீதிபதிகள் ஏற்கவில்லை,
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications