முப்படைகளின் ஒருங்கிணைந்து செயல்பட அசத்தல் திட்டம்! அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய தகவல்
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Recommended Video
நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்றது. அதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் குறித்தும் அவர் பேசினார்.

ஒருங்கிணைந்த கமெண்ட் மையம்
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "கார்கில் ஆப்ரேஷன் விஜய் எனப் பல ஆப்ரேஷன்களில் கூட்டுச் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த கமெண்ட் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். முப்படைகளுக்குமான இந்த ஒருங்கிணைந்த கமெண்ட் மையம் என்பது பாதுகாப்புத் துறையில் நீண்ட காலம் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய சீர்திருத்தம் ஆகும். கடந்த ஆண்டு முதலே இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

நெகிழ்வு தன்மை
இந்த கமெண்ட் மையம் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் அமைய உள்ளது. இந்த புதிய செயல்முறைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவைக் கடந்த ஜூன் 2021இல் மத்திய அரசு அமைந்து இருந்தது. எதிர்பாராத சூழல் ஏற்படும் போது, தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஏதுவானதாகவும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும் வகையிலும் இது இருக்கும் என அதிகாரி கூறினார்.

முக்கிய சீர்திருத்தம்
இந்த ஒருங்கிணைந்த கண்டிரோல் ரூம் முழுவதுமாக செயல்பட ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், விரைவாகப் பழைய முறையில் செயல்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நமது பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தச் சீர்திருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தியாகிகள்
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், "நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க ராணுவ வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நாடு எப்போதும் மறக்க முடியாது. தியாகிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மிகுந்த மரியாதை அளிப்பது மக்களின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். உங்கள் உதவிகளைத் தியாகிகளின் குடும்பத்தினருக்குச் செய்யுங்கள்.

பாதுகாப்பு ஏற்றுமதி
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்து.. ஆனால், இன்று உலகின் மிக முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. பாதுகாப்பு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. 13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை நாடு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்குள் அதை ₹35,000 முதல் ₹40,000 கோடியாக உயர்த்துவதே இலக்கு" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications