செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கு.. ஒரு எம்.பியாக பெருமையா இருக்கு.. மோடியை பாராட்டிய இளையராஜா!
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இசையமைப்பாளரும், ராஜ்யசபா நியமன எம்.பியுமான இளையராஜா, செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் ரூ.970 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மக்களவையின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
#MyParliamentMyPride @narendramodi @PMOIndia #NewParliamentBuilding pic.twitter.com/SXhaAiymVc
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 27, 2023
முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு இசையமைப்பாளரும், ராஜ்யசபா நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைவது பற்றியும் பெருமையுடன் தெரிவித்துள்ளார் இளையராஜா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதில் பங்காற்றியவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகமான தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் தருணத்தில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான உறைவிடமாக இந்தக் கட்டிடம் மாற நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

ராஜ்ஜியங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். அவருடைய கடமைக்கு உட்பட்ட செயல்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அவருடன் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications