நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம்!
டெல்லி: தமிழ்நாட்டின் நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் மசோதா ராஜ்யசபாவிலும் ஒரு மனதாக இன்று நிறைவேறியது.
தமிழ்நாட்டில் நரிக்குறவர், குருவிக்காரர் ஜாதிகளை பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் நரிக்குறவர், குருவிக்காரர்களை ஏன் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற காரணங்களையும் முதல்வர் ஸ்டாலின் விவரித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில் நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விடுபட்ட சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.
இதனடிப்படையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் லோக்சபாவில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா லோக்சபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன். எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் அதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். அந்தச் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மசோதா ராஜ்யசபாவிலும் இன்று ஒருமனதாக நிறைவேறியது. இம்மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களது கருத்துகளையும் முன்வைத்தனர்.

மத்திய அரசின் மசோதாவில் Narikuravan, Kuruvikaran என்ற ஒருமையில்தான் உள்ளது; இது அந்த மக்களை இழிவுசெய்வதாகும்; ஆகையால் குருவிக்காரர், நரிக்குறவர் என மரியாதை விகுதியுடன் அழைக்க வேண்டும் என லோக்சபாவில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தி இருந்தனர். இது தொடர்பாக விசிக எம்.பி.ரவிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் லோக்சபாவிலும் பேசினார்.
நரிக்குறவன், குருவிக்காரன் என ஒருமையில் அழைப்பது தொடர்பாக ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்,கடந்த சில ஆண்டுகளாக எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதிகள் 'ன்' என்ற விகுதியோடு முடிவதை மாற்றி 'ர்' என முடியும் படி திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். திருமாவளவனும் இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடத்தில் அளித்து இருக்கின்றார். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.நாடாளுமன்றத்தில் அறிமுகம் படுத்தப்படும் சட்ட மசோதாவில் நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை நரிக்குறவர் குருவிக்காரர் எனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருத்த தீர்மானம் நோட்டீஸ் ஒன்றை நான் அளித்திருக்கிறேன். அதை ஏற்று அந்தப் பெயர்கள் திருத்தப்படும் என நம்புகிறேன். அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விவாதத்துக்கு நாள் குறிக்கப்படும். அப்போது அதை உறுப்பினர்கள் வலியுறுத்தினால் நிச்சயம் அதை மாற்ற முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை ஆதரித்து வழிமொழியவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்கள் 'ர்' விகுதியோடு மாற்றப்பட்டதைப் போல எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களும் மாற்றப்பட தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications