ராஜ்யசபா தேர்தல்.. காங்கிரஸ் கட்சியின் தமிழக வேட்பாளர் யார்?.. இன்று அறிவிப்பு?
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் உள்பட பல மாநிலங்களின் வேட்பாளர்களின் பட்டியில் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள்.
இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

6 எம்பி பதவிகள்
அந்த வகையில் தமிழகத்தில் 6 எம்பி பதவிக்கள் காலியாகின்றன. அதில் திமுக 3 இடங்களிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நீண்ட இழுபறி
அது போல் அதிமுக சார்பில் நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் தமிழகத்தில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களான ப சிதம்பரம், கே எஸ் அழகிரி, கே வி தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் ரேஸில் இருந்ததாக கூறப்படுகிறது.

ப சிதம்பரம்
இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு குடும்பத்தினருக்கு ஒருவருக்கு மட்டுமே பதவி என முடிவு எடுக்கப்பட்டதால் இந்த முறை எம்பி பதவி ப சிதம்பரத்திற்கு கிடைக்காது என சொல்லப்பட்டது. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய போவதால் அவரும் எம்பி பதவியை பெற முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை ப சிதம்பரத்தை எம்பியாக்கவே விரும்புகிறதாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசை பாயிண்ட் பாயிண்ட்டாக மடக்குவதில் ப சிதம்பரம் கெட்டிக்காரர் என்பதால் அவரை ராஜ்யசபா எம்பியாக்க விரும்புகிறதாம்.

இன்று அறிவிப்பு
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. லண்டனில் உள்ள ராகுல்காந்தி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

தமிழக காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் யார்
ப சிதம்பரத்திற்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி அவரது பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் இன்றே வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிகிறது. ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 95 எம்பிக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 29 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications