‛‛கொந்தளிப்பு’’.. எதிர்ப்புக்கு பணிந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை! நாளை விடுமுறை இல்லை என அறிவிப்பு
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை மதியம் 2.30 மணி வரை டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. நாளை மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கு ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவுக்கான பூஜை, சடங்குகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளைய தினம் தான் முக்கியம். நாளை தான் கோவில் கும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட உள்ளது. தற்போது கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் நாளை அந்த சிலை பூஜை, சடங்குகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசம், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்பட 10க்கும் அதிகமான மாநிலங்களில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பங்குசந்தை, தொழிற்சாலைகளுக்கும் நாளை மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‛‛நாளைய தினம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மருத்துவமனை காலையில் இரந்து 2.30 மணி வரை வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. நாளைக்கு அப்பாயிண்ட் பெறப்பட்ட நபர்களுக்கான சிகிச்சை மாற்று தேதியில் மேற்கொள்ளப்படும். இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி உள் சிகிச்சை பிரிவுகள் உள்பட சில முக்கிய சிகிச்சை பிரிவுகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது ராமர் கோவில் விழாவுக்காக நோயாளிகளை சிரமத்துக்கு உள்ளாக்குவதா? நோயாளிகளின் நலனை விட கோவில் விழா முக்கியமா? என பல்வேறு அமைப்பினர் கோபத்தை கொப்பளித்தனர். மேலும் வலைதள பக்கங்களிலும் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். இந்நிலையில் தான் இந்த எதிர்ப்புக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிந்துள்ளது. அதன்படி நாளை அரைநாள் விடுப்பு தொடர்பான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதோடு நாளைய தினம் வழக்கம்போல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும். விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜிப்மர் மருத்துவமனை நாளை மதியம் 2.30 வரை இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நேரத்தில் வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் அவசர பிரிவு சேவைகள் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications