இந்தியாவில் கொரோனா ஆதிக்கம்.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. இதுதான் புதிய அட்டவணை!
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜெஇஇ மெயின் தேர்வுகான புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் மக்களை பாடாய்படுத்திய கொரோனா இந்த முறை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த போதிலும் கொரோனா தொடர்ந்து அடங்க மறுக்கிறது. கொரோனா ஆதிக்கம் காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடியுள்ளன.
பள்ளி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தொற்று ஆதிக்கம் அதிகமாக இருந்து வருவதால் சிபிஎஸ்இ நடத்தும் 10-ம் வகுப்பு தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ நடத்தும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பின்னர் நடைபெறுவது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 28 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற இருந்த ஜெஇஇ மெயின் தேர்வும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஏற்கனவே இரண்டு கட்டமாக நடந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications