நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் மு.குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் விருது!
டெல்லி: தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது, நியூஸ் 18 செய்தி சேனலின் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா நூற்றாண்டையொட்டி, அவரின் நினைவுகளை போற்றும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு 'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்' வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க நிகழ்வாக கருதப்படும் இந்த விருது வழங்கும் விழாவில், பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கிடையே தங்கள் பணியை துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வரும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், பிராந்திய மொழியில் ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து விரிவாகவும், அழுத்தமாகவும், அம்மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு செய்யும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது.
அதன்படி, 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். சிறந்த ஊடகவியலாளருக்கான விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

ஓகி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான குமரி கடலோரத்தில் களத்தில் இருந்து செயலாற்றி, பிரச்னைகளின் வேர்களைக் கண்டறிந்து களநிலவரத்தை மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மு.குணசேகரன். ஒகி புயலின் பாதிப்பையும், மீனவர்கள் சந்தித்த துயரையும் ஒரு மணி நேர ஆவணப்படமாகவும், களத்தில் இருந்து மக்களின் உணர்வுகளை 'காலத்தின் குரல்' விவாத நிகழ்வின் மூலமாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தது; மீனவ சமூகத்தில் குறிப்பாக பெண்கள் படும் துயரை தொடர் நேரலைகள் மூலம் உலகறியச் செய்தது ஆகியவற்றுக்காக இவ்விருதுக்கு மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஊடகவியலாளர்களால் தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும், பெருமதிப்புமிக்க இவ்விருதை தமிழ் ஊடகங்களில் இருந்து பெறும் முதல் பத்திரிகையாளர் மு.குணசேகரன் என்பதும், இந்த விருதுக்கு தேர்வான முதல் தமிழ் ஊடகம் நியூஸ் 18 தமிழ்நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications