அலறப்போகும் சீனா.. பயத்தில் பதுங்கும் பாகிஸ்தான்! ரேம்பேஜ் ஏவுகணையை களமிறக்கியது இந்திய விமானப்படை!
டெல்லி: சமீப நாட்களாக இந்திய எல்லையில் அத்துமீறும் போக்கை சீனா தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை விமானங்களில் 'ரேம்பேஜ்' எனும் சூப்பர் சோனிக் ஏவுகணை இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய சீனா எல்லைப் பகுதியான தவாங் செக்டாரில் இரு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா வாலாட்டத் தொடங்கியது. இந்த பகுதியில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கி வந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சீனா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

மாறாக சர்ச்சைக்குரிய பகுதியில் அதிக அளவு படைகளையும் சீனா குவித்தது. இப்போது அருணாச்சல பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்திய விமானப்படை முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது. அதாவது, இந்திய ராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த ரேம்பேஜ் ஏவுகணையை விமானப்படையில் சேர்த்திருக்கிறது. கடற்படை விமானங்களிலும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏவுகணை 250 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது மாக் 2 சக்தியை கொண்டதாகும். அதாவது, ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும். ஜாகுவார், சுகோய்-30 எம்கேஐ மற்றும் மிக்-29 ஆகிய போர் விமானங்களில் இந்த ஏவுகணை இனி பயன்படுத்தப்படும். இதன் மூலம் விமானப்படை மற்றும் கடற்படையின் திறன் அதிகரிக்கும் என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது உலக நாடுகளால் கவனிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணை வடிவமைத்தன. ஆனால், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மணிக்கு மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஏவுகனைகளை உக்ரைனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
மறுபுறம் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக இன்று சோதனை செய்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications