அதுதான் ரத்தன் டாடா! கண்ணீர் விட்ட சக பயணி.. ஐடியாவை கேட்டு ஸ்டார்ட்அப்பில் கோடிகளில் முதலீடு
டெல்லி: பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா தனக்கு உதவிய கதையை சஞ்சீவ் கவுல் என்ற தொழிலதிபர் பகிர்ந்து உள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பு ஏற்ற பின்னர், அவரது நிறுவனங்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமம் பல புதிய உயரங்களை அடைந்தது.
இதுமட்டுமன்றி பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும் ரத்தன் டாடா பெரிய உதவியைச் செய்துள்ளார். பல புதிய நிறுவனங்களுக்கு ரத்தன் டாடாவுக்கு மென்டராகவும் இருந்துள்ளார்.

சஞ்சீவ் கவுல்
அப்படித்தான் தொழிலதிபர் சஞ்சீவ் கவுல், டாடா உடனான எதிர்பாராத சந்திப்பின் போது, அவர் எப்படி தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அமைக்க உதவினார் என்பதை நினைவு கூர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர், இரு அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து அட்வினஸ் தெரபியூட்டிக்ஸ் என்ற மருந்து நிறுவனத்தைக் தொடங்கினார். இந்த மருந்து நிறுவனம் டாடா குழுமத்தால் பேக்ஆப் செய்யப்பட்டது. ஆனால், அது எப்படி நடந்தது என்று இதுவரை பலருக்கும் தெரியாமல் இருந்தது.

சோகம்
அந்த கதையைத்தான் இப்போது கவுல் பகிர்ந்து உள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அவர் மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டு இருந்தார். அன்று தான் கவுலின் ஸ்டார்ட்அப் ஐடியாவை மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று நிராகரித்து இருந்தது. இதனால் பெரும் சோகத்தில் இருந்த கவுல், விமானத்தில் அமர்ந்தவாறே தனது பவர்பாயிண்டை சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ரத்தன் டாடா
பவர்பாயிண்டில் என்ன தான் தவறு இருக்கிறது என்பதை அவர் கண்டறிய முயன்றனர். கவுலின் கண்ணில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. அந்தச் சமயத்தில் அவரின் அருகே மிகவும் எளிமையாக 84 வயதான நபர் ஒருவர் வந்து அமர்ந்தார். கவுலின் கண்ணீரைக் கவனித்த அந்த நபர், அவரை பார்த்து என்ன பிரச்சினை என்று கேட்டார். அந்த நபர் வேறு யாரும் இல்லை ரத்தன் டாடா தான்.

ஐடியா
உடனே ரத்தன் டாடாவிடம் தனது குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளார் கவுல். உலகின் இரு தலைசிறந்த ஆய்வாளர்களை இந்தியா இழக்க உள்ளதாக வேதனை தெரிவித்தார். அதன் பின்னர், ரத்தன் டாடா ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஐடியாவை கேட்டுள்ளார். இதற்குள் தனது அருகே அமர்ந்து இருந்தது ரத்தன் டாடா என்பதை உணர்ந்து கொண்ட கவுல் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஐடியாவை விளக்கி உள்ளார்.

நம்பிக்கை
தான் எல்லா ஆப்ஷன்களிலும் முயன்றுவிட்டதாகவும் தனக்கு இன்னும் முதலீடு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தலைசிறந்த இரு அமெரிக்க ஆய்வாளர்கள் சில நாட்களில் அவர்களின் சொந்த நாட்டிற்குச் செல்ல உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட டாடா அவரை சற்று உற்சாகப்படுத்தி உள்ளார். மேலும், டாடா குழுமத்தில் இருந்து யாராவது உங்களைத் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறி உள்ளார்.

உடனே முதலீடு
எதோ தன்னை ஆசுவாசப்படுத்துவதற்காக டாடா இப்படிக் கூறுகிறார் என்றே கவுல் நினைத்துள்ளார். ஆனால், அன்று இரவே சரியாக 9 மணிக்குக் கவுலுக்கு டாடா குழுமத்தின் மேனேஜர் கால் செய்துள்ளார். மறுநாளே இரு அமெரிக்க ஆய்வாளர்கள் மற்றும் கவுல் டாடா குழும உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் உடனடியாக முதலீடும் கிடைத்து நிறுவனத்தைத் தொங்கி உள்ளார் கவுல்.

முக்கிய நிறுவனம்
இப்போது மருத்துவத் துறையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகக் கவுலின் நிறுவனம் உள்ளது. இவை அனைத்தும் ரத்தன் டாடா என்ற ஒற்றை மனிதன் வெறும் விமான பயணத்தின் போது, தனது ஐடியாவில் நம்பிக்கை வைத்ததால் மட்டுமே சாத்தியமானது என்று நினைவு கூர்கிறார் கவுல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications