எத்தனை ஓபிசி? தலித் இருக்கீங்க? 'கையை தூக்குங்க'- செய்தியாளர்களை 'சம்பவம் செய்த' ராகுல் காந்தி!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லி செய்தியாளர்கள் செய்த 'சம்பவம்தா'தான் தலைநகரில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம்... இதனைத்தான் காங்கிரஸ் கட்சியி தேர்தல் கால பேராயுதமாக ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பேசிய போதும் ராகுல் காந்தி, மத்திய அரசின் செயலாளர்களில் ஓபிசி பிரதிநிதித்துவம் எவ்வளவு என பட்டியல் போட்டு பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை ராகுல் வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களான சித்தராமையா, பூபேஷ் பாகெல், அசோக் கெலாட், சுக்விந்தர் சுகு ஆகியோர் புடைசூழ செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி.
இந்த சந்திப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த மாட்டார்; அவருக்கு தகுதி கிடையாது; பாஜகவில் 10 முதல்வர்களில் ஒரே ஒருவர்தான் ஓபிசி முதல்வர்; காங்கிரஸில் 4 முதல்வர்களில் 3 பேர் ஓபிசி என பட்டியல் போட்டு சரவெடியாக வெடித்தார்.
அப்போது திடீரென செய்தியாளர்களை நோக்கி, உங்களில் எத்தனை பேர் பட்டியல் சாதியினர் ? என கேள்வி கேட்டார் ராகுல் காந்தி. அப்போது யாரும் கை தூக்கவில்லை. உங்களில் எத்தனை பேர் பழங்குடியினர்? எனவும் கேட்டார். அப்போது யாரும் கை தூக்கவில்லை. உங்களில் எத்தனை பேர் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றார். இதற்கும் யாரும் கை தூக்கவில்லை. அப்போது, இதற்காகத்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்; அப்போது எல்லா உண்மையும் தெரிந்துவிடும் என்கிறோம் என்றார் ராகுல் காந்தி. இதுதான் டெல்லி செய்தியாளர்களிடையே ஓடுகிற ஹாட் டாபிக்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications