டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசின் 100 நாள் ஆட்சி.. வீடியோ வெளியிட்டு கலாய்க்கும் காங்கிரஸ்

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த 100 நாளில் எந்த வளர்ச்சியும் நாட்டில் ஏற்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகியுள்ளது. இதையொட்டி பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த 100 நாளில் நிறைவேற்றிய சட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பாஜகவினர் இறங்கி உள்ளனர்.

     ravaged economy : Rahul Gandhi attacks PM Modis 100 Days

    இதேநேரம் காங்கிரஸ் கட்சி பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது.

    மோடி அரசின் 100 நாள் ஆட்சி.. மூன்று வார்த்தைகளுடன்.. வீடியோ வெளியிட்டு கலாய்க்கும் காங்கிரஸ்மோடி அரசின் 100 நாள் ஆட்சி.. மூன்று வார்த்தைகளுடன்.. வீடியோ வெளியிட்டு கலாய்க்கும் காங்கிரஸ்

    இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் தொடர்நது வீழ்த்தப்பட்டது , விமர்சனங்களை தவிர்க்க ஊடகங்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுகிறது. பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையே இப்போது உள்ளது" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் இன்று மோடி அரசின் 100 நாள் ஆட்சி குறித்து கூறுகையில், 'சாதாரண மனிதனுக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்து தான் லோக்சபா தேர்தலில் மக்கள் பாஜகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக சாதாரண மக்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இணைய ஊடகங்கள் ஒருதலைபட்சமாகி வருகிறது பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது.

    கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசிடம் எந்த செயல்திட்டமும் இல்லை, ஆனால் அரசியல் எதிரிகளுக்கு எதிராக வேதாந்த அரசியல் நடக்கிறது. அமலாக்க துறையால் எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, வருமான வரித் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய வணிகர்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள் " என கூறியுள்ளார்.

    English summary
    Congress leader Rahul Gandhi attacks PM Modi's 100 Days, he said a glaring lack of leadership, direction & plans where it’s needed the most - to turnaround our ravaged economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X