4 பேர் போதாது.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க விரும்பும் பாஜக.. தமிழக ஆளுநராகிறாரா ரவிசங்கர் பிரசாத்?
டெல்லி: தமிழகத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் மிகவும் ஆச்சரியம் என்னவெனில் அமைச்சர்களாக இருந்த ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது.
அதாவது கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க பாஜகவிலேயே பல மாற்றங்களை கொண்டு வந்தார் பிரதமர்.

ஆளுநர் புரோஹித்
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் மாற்றப்படலாம் என பேச்சு எழுந்துள்ளது.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்திற்கு பதிலாக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. எனினும் இதுகுறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இவர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார். பொதுவாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே வார்த்தை போர் வந்த போதெல்லாம் சமரசம் செய்தவர் பிரசாத்தான்.

ஆளுமை
தற்போது ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய வைக்க முயற்சிக்கிறது. திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை உருவாக்க பாஜக தலைமை விரும்புகிறது. கடந்த தேர்தலில் 4 பேர் சட்டசபைக்கு சென்றதால் அக்கட்சிக்கு மேலும் உத்வேகம் பிறந்துவிட்டது.

சவால்
அது போல் அண்டை மாநிலமான புதுவையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அது போல் தமிழகத்திலும் வருங்காலத்தில் பாஜக ஆட்சி கட்டிலில் அமர தேவையான நடவடிக்கைகளை 2026 சட்டசபை தேர்தலுக்குள் செய்து முடிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்காது என பலர் கூறி வரும் நிலையில் இதை ஒரு சவாலாக ஏற்று நடத்தி காட்ட விரும்புகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
மேலும் வரும் 2024இல் நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான எம்பிக்களை தமிழகத்திலிருந்து பாஜக பெற விழைகிறது. மேலும் திமுகவுக்கு தொல்லை கொடுக்க தமிழகத்திற்கு அதிரடியாக செயல்படும் ஆளுநரை நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது. அந்த அதிரடிக்கு சொந்தக்காரர் ரவிசங்கர் பிரசாத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications