கூகுள், அமேசானால் ஒரே பிரச்சனை! கண்ட நேரத்தில் போன் போட்டு அசிங்கமா திட்றாங்க -ரிசர்வ் வங்கி ஆளுநர்
டெல்லி: கூகுள், அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சேவைகளில் ஈடுபடுவது பெரும் சிக்கலாக இருப்பதாகவும், கடனை திரும்ப வசூலிக்க கண்ட நேரத்தில் கால் செய்து ஆபாசமாக பேசுவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் கூகுள், அமேசான், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நிதி சேவையில் ஈடுபட்டு வருவது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த நிறுவங்களை தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறோம்.

கடன் வசூலிப்பதில் கெடுபிடி
இந்த நிறுவனங்கள் கொடுத்த கடனை மீண்டும் வசூலிப்பதற்கு கடுமையான நடைமுறைகளை கையில் எடுக்கின்றனர். கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை கண்ட நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி துன்புறுத்துகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. நமக்கு இதுகுறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

ஆன்லைன் கடன் செயலிகள்
கூகுள் நிறுவனம் கூகுள் பே என்ற செயலியையும், அமேசான் நிறுவனம் அமேசான் பேவையும், பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் பேவையும் நடத்தி வருகின்றன. வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கே இந்த செயலிகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் சிட் பண்ட் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நேரத்தில் ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பல உருவாகின.

ஆபாச பேச்சு
அதில் ஏராளமான மக்கள் கடன் பெற்று வந்துள்ளனர். வட்டியையும், முதலையும் சொன்ன நேரத்தில் செலுத்தாத வாடிக்கையாளர்களை நிறுவன ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அசிங்கமாக பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாடிக்கையாளரின் செல்போனில் இருக்கும் தொலைபேசி எண்களை ஹேக் செய்து அவர்களுக்கு கடன் பெற்றவர் குறித்த தவறான மெசேஜ்களை அனுப்பி அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தன.

பலர் தற்கொலை
இவர்கள் கொடுத்த அழுத்தம் மற்றும் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆன்லைன் கடன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த கருத்து முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications