RBI Repo rate: பல கோடி இந்தியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி! இனி EMI குறையும்
டெல்லி: இந்தியப் பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். கடந்த 3 நாட்களாக ரிசர்வ் வங்கி இது தொடர்பாக ஆலோசித்த நிலையில், இன்று ரெப்போ விகிதம் குறித்து தனது முடிவை அறிவித்துள்ளது.. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.5%ல் இருந்து 5.25%ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோம் லோன் இஎம்ஐ குறையும்.
எப்போதும் நாம் வாங்கும் கடன்களுக்குச் செலுத்தும் இஎம்ஐ என்பது ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்தே இருக்கும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தான் கட்டப்படுத்தும். பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும்.

ரெப்போ வட்டி
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ரெப்போ வட்டி விகிதம் மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டியாகும். இந்த வட்டி அதிகமாகும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் உயரும். இதனால் இஎம்ஐ அதிகரிக்கும். இந்த வட்டி விகிதம் குறையும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் குறையும். இதனால் இஎம்ஐ குறையும்.
அறிவிப்பு
அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்யக் கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பல்வேறு விஷயங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். இது தொடர்பாக இன்றைய தினம் ரிசர்வ் வங்கி தனது முடிவை அறிவிக்கவுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இது குறித்த முடிவைக் காலை 10 மணியளவில் அறிவித்தார்.
அதில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படுவதாக சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.. ரெப்போ வட்டி விகிதம் 5.5%ல் இருந்து 5.25%ஆக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஹோம் லோன் குறையும்
இருப்பினும், பணவீக்கம், சர்வதேச சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றே வல்லுநர்கள் கருதினர். இருப்பினும், பொருளாதார வளர்ச்சி தேவை என்பதால் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு காரணமாக ஹோம் லோன் வாங்கியவர்களுக்குக் கொண்டாட்டம் தான். இதன் காரணமாக ஹோம் லோன் இஎம்ஐ கணிசமாகக் குறையும்
அதேநேரம் இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும் ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, பணப் புழக்கம் அதிகரிக்கும். இதன் காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. அதுபோன்ற சூழல்களில் தங்கம் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலம்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரெப்போ வட்டி விகிதம் 6.50%ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அது 6.25%ஆகவும், பிறகு ஏப்ரல் மாதம் அது 6%ஆக குறைக்கப்பட்டது. பிறகு ஜூன் மாதம் வட்டி விகிதம் 5.5%ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த கூட்டங்களிலும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் மீண்டும் ரெப்போ வட்டியைக் குறைத்துள்ளது. ஹோம் லோன் இஎம்ஐ குறையும் என்பதால் மிடில் கிளாஸ் மக்கள் ரிசர்வ் வங்கியின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications