ஐயய்யோ! அது திருமண வீடியோ அல்ல.. சினிமா பட ஷூட்டிங்!.. சிரிச்சி சிரிச்சி வைரலான மணப்பெண் விளக்கம்
டெல்லி: சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ திருமண வீடியோ அல்ல என்றும் அது ஒரு படத்திற்கான சூட்டிங் என்றும் அதில் நடித்த நடிகை விளக்கமளித்துள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய சமூகவலைதளங்கள் வந்தவுடன் வீடியோக்கள், புகைப்படங்கள் என எதை பதிவு செய்தாலும் அது நன்றாக இருந்தால் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரு வீடியோ வைரலானது. அது பார்ப்பதற்கு ஒரு திருமண நிகழ்ச்சி போல் இருந்தது.

மணமகன்
அந்த வீடியோவில் மணமகன், மணமகள் ஆகியோர் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படக்காரர் மணமகனை விட்டுவிட்டு மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார். ஒரு கட்டத்தில் மணமகளின் தலை சாய்ந்த நிலையில் இருந்தது. இதை சரி செய்ய முற்பட்டார் போட்டோகிராபர்.

சமூகவலைதளங்கள்
இதற்காக அந்த பெண்ணின் தாடையில் கைவைத்தார். உடனே மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேறி அந்த புகைப்படக்காரரின் முதுகில் படாலென அடிக்கிறார். இதை பார்த்த மணப்பெண் தரையில் அமர்ந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

சிரிப்பு
இந்த வீடியோவை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து லைக்ஸ்களையும் கமென்ட்டுகளையும் கொடுத்துள்ளனர். மணமகனின் செயலால் அதிர்ச்சி அடையாத அந்த மணப்பெண் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நன்றி
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து மணப்பெண் தற்போது ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த திருமண மேடை வீடியோ, தான் நடித்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி. இந்த வீடியோவை பகிர்ந்தவருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் பெயர் டார்லிங் பியார் ஜூக்தா நஹீ ஆகும்.
|
வைரல் வீடியோ
மணக்கோலத்தில் வைரலான பெண்ணின் பெயர் அனிக்ரித்தி சவுகான். இவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையாவார். வைரலாக இணையத்தில் பரவிய வீடியோ குறித்து தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்த நடிகை தான் நடித்த படத்தின் பெயரைக் குறிப்பிட்டு வைரலாக பரவிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications