பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி நிம்மதிக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்றம்- என்னாவாகுமோ எதிர்காலம்?
டெல்லி: அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் அதிரடி உத்தரவால் உயிர்பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழக்காக இந்த பண மோசடி வழக்கு இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு மிக நம்பிக்கையானவர்களில் ஒருவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். போயஸ் தொட்டத்து நிழல்களுடன் மிக நெருக்கமாக இருந்த செந்தில் பாலாஜி, அதீதமான அரசியல் கணக்குகளைப் போட்டு முதல்வர் பதவி கனவில் இருந்ததாக கூறப்பட்டது. இத்தகைய தகவல்களை ரசிக்காத ஜெயலலிதா, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்தும் அதிமுக பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.

பண மோசடி வழக்கு
பின்னர் 2017-ல் செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, அரசு போக்குவரத் துறையில் வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என கணேஷ்குமார், தேவசகாயம் முதலில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கில் 2017-ம் ஆண்டு செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். இவ்வழக்கில் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதேபோல் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. இவ்வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கு ரத்து
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது 2020-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் தம் மீது புகார் கொடுத்தவர்களுடன் சமாதானமடைந்துவிட்டதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டது. இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியைக் கொடுத்தது.

டாப் கியரில் செந்தில் பாலாஜி
திமுகவில் ஆளும் கட்சியின் டாப் லெவல் அமைச்சர்களில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி. திமுகவின் ஒட்டுமொத்த மேற்கு தமிழகத்தின் முகமாக செந்தில் பாலாஜி உருவெடுத்து நிற்கிறார். செந்தில் பாலாஜியின் கோவை கூட்ட ஏற்பாடுகள் திமுக தலைமையையே மிரள வைத்திருக்கின்றன. அண்மையில் 10,000 மாற்று கட்சியினரை திமுகவில் சேர்த்து அசத்தினார் செந்தில் பாலாஜி. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெரிகுட் புக்கிங்கில் இருந்து வருகிறார் அவர். இந்த நிலையில் பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டது செந்தில் பாலாஜி தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது.

என்னவாகும் அரசியல் எதிர்காலம்?
அதேநேரத்தில் பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சேலம் தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதில் செந்ந்தில் பாலாஜி தரப்பும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்துவிட்டது. இது செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும். இவ்வழக்குதான் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications