பிறந்தது வெவ்வேறு நாடுகள்.. தேசிய கீதம் பாடிய அகதிகள் - ‘இந்தியாவின் பெருமை இதுதான்’.. நெகிழ்ச்சி!
டெல்லி : இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 புலம்பெயர்ந்தோர், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள் தங்களது இந்திய நேசத்தை தேசிய கீதம் பாடி வெளிப்படுத்தி உள்ளனர்.

மியான்மரை சேர்ந்த ஆரா ரெம் மாவி, லென் நுயாம், விக்டர், மரியா, முன்பி, சான் சான், இலங்கையை சேர்ந்த திசாந்தனா, கேமரூனை சேர்ந்த ஒடிட்டி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அப்துல்லா, அகுலா, சேயாஸ் ஆகியோர் இந்தியாவில் புலம்பெயர்ந்து தஞ்மடைந்துள்ளனர்.
கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து, இவர்கள் 12 பேரும் தேசிய கீதத்தை மெய்சிலிர்க்க பாடியுள்ளனர். இந்த வீடியோவை மத்திய கலாச்சார அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
நார்வேயின் முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியாவுக்கு 75 வயது! இந்திய அன்னையின் எப்போதும் வரவேற்கும் அரவணைப்பில் அடைக்கலம், நம்பிக்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் கண்டுள்ள, கொந்தளிப்பான அண்டை நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் இதயங்களில் இந்தியா வாழ்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை சமூகவலைதளவாசிகள் பலரும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டர்வாசி ஒருவர், "என்ன ஒரு அழகான காட்சி! நான் எப்போதும் பார்க்க விரும்பும் என் இந்தியா இது!! இது ஒரு சிறந்த மற்றும் அன்பான தேசத்தின் கதை. அவர்கள் இந்தியாவைத் தங்கள் வீடாகத் தேர்ந்தெடுத்ததற்காக நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். ஜெய் ஹிந்த்!!!" எனத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications