மோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை!
பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு காரணமாக தற்போது இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு காரணமாக தற்போது இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார், என்று டிரம்ப் கூறினார்.

என்ன எதிர்ப்பு
டிரம்ப்பின் பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பிடம் அப்படி எதுவும் உதவி கேட்கவில்லை. மோடி உதவி கேட்டதாக டிரம்ப் கூறியது தவறானது. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

என்ன போராட்டம்
இதனால் இந்தியர்கள் பலர் அமெரிக்க அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறார்கள். நியூயார்க்கில் டிரம்ப்பின் கருத்திற்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. டிரம்ப் வெளியிட்ட கருத்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன பிரச்சனை
இன்று நாடாளுமன்றத்திலும் இதே பிரச்சனை காங்கிரஸ் கட்சி சார்பாக எழுப்பப்பட்டது. மோடி ஏன் டிரம்ப்பிடம் சென்று உதவி கேட்டார். இந்தியாவின் மானத்தை மோடி வாங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில், மோடி டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன சிக்கல்
இந்த பிரச்சனை காரணமாக தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய பிரதமர் குறித்து இப்படி பேசுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்தியா அமெரிக்கா உறவில் இதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வைத்துக்கொண்டு டிரம்ப் இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications