அடுத்த 15 நாட்களுக்கு.. 3,000 கனஅடி வீதம் காவிரி நீர் திறந்துவிட வேண்டும்! கர்நாடகாவுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடக அணைகளிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு மிகவும் தாமதமாகவே நீர் திறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பருவமழை கை கொடுத்ததால், டெல்டா விவசாயிகள் சற்றே நிம்மதியடைந்திருக்கின்றனர்.

Cauvery water

இப்படி இருக்கையில், மேட்டூரில் நீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் முழுவதுமாக நிறுத்தப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இதை தவிர்க்க வேண்டும். அணைக்கான நீர் வரத்து அதிகரித்தால்தான் சம்பா-தாளடி சாகுபடிக்கு தொடர்ந்து நீர் திறந்துவிடப்படும். எனவே அணைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூடத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இன்று மதியம் 3 மணிக்கு ஆணையத்தின் 60வது கூட்டம் டெல்லியில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. அதில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினசரி 3,000 கனஅடி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்தம் சுமார் 3 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கட்டாயம் கர்நாடகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், கூடுதல் நீர் திறக்கப்பட வேண்டும் என்றும் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். காவிரியிலிருந்து உரிய நீர் முழுமையாக வழங்கப்படாததால் தமிழக அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக தரப்பில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முழு பங்கையும் தங்களால் இன்னும் முழுமையாக திறந்துவிட முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ப்பட்டிருக்கிறது. தங்களின் அணை பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தற்போதைய நீர் இருப்பு நிலவரத்தை கவனமாக கணக்கிட்டு, அதன் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடகா கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+