காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. 21 தொகுதிகளுக்கு வெளியீடு.. பல்வேறு வாரிசுகளுக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. விளவங்கோடு, வேளச்சேரி, குளச்சல், மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய்வசந்த போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Release of candidate list for 21 constituencies in Congress

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

Release of candidate list for 21 constituencies in Congress

இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி பொன்னேரி- துரை சந்திரசேகர். ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை,
சோளிங்கர்- முனிரத்தினம், ஊத்தங்கரை- ஆறுமுகம், கள்ளக்குறிச்சி- மணிரத்தினம், ஒமலூர்- மோகன் குமாரமங்கலம், ஈரோடு கிழக்கு- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா, உதகமண்டலம்- கணேஷ், கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை- தென்னரசு, விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், காரைக்குடி- மான்குடி, மேலூர்- ரவிசந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ், சிவகாசி- அசோகன், திருவாடனை- கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ், தென்காசி- பழனி நாடார், நாங்குநேரி- ரூபி மனோகரன், கிள்ளியூர்- ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு, வேளச்சேரி, குளச்சல், மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய்வசந்த போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+