’அரசியலமைப்பு மீதான தாக்குதல்’ வாக்காளர்களை நீக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2-ம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியுள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையையே அது தாக்குகிறது எனவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அரசியலமைப்பு ஒழுங்கையே இது மறுப்பதாகும் என கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பரபரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார். நீதிபதி கூறியதாவது:-

Removing Millions of voters is Strikes At Heart Of Constitution Supreme Court Judge Ujjal Bhuyan

நியாயப்படுத்த முடியாது

இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களில் இரண்டு பிரிவினரை வைக்கவில்லை. வாக்குரிமை பெற்ற குடிமக்கள், வாக்குரிமை இல்லாத குடிமக்கள் என இருவகையாக பிரிவிக்கவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2-ம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதாகும்.

எத்தகைய மாற்று வாதங்களாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அரசியலமைப்பின் அடிப்படையையே அது தாக்குகிறது. அரசியல் அமைப்பின் 14 வது பிரிவு அனைவருக்கு சமத்துவ உரிமையை உறுதி செய்கிறது. சட்டப்பிரிவு 26 வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்குகிறது. எனவே, அத்தகைய நடவடிக்கைகள் அவற்றுக்கு எதிரானது.

அரசியலமைப்பு ஒழுங்கையே மறுப்பதாகும்

இந்திய அரசியலமைப்பின் கீழ் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அரசியலமைப்பு ஒழுங்கையே இது மறுப்பதாகும் என்று கூட நான் சொல்வேன். ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒருமுறை இடம்பெற்றுவிட்டால், அந்த நபர் இறந்தவர் என்பதைத் தவிர, உரிய அறிவிப்பு வழங்கி, அவரது தரப்பைக் கேட்காமல் பெயரை நீக்க முடியாது.

இந்திய குடிமகனின் வாக்குரிமையையோ அல்லது வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் உரிமையையையோ அவரது குடியுரிமையிலிருந்து பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிப்பது உடலில் இருந்து ஆன்மாவை அகற்றுவதற்கு சமமாகும்" என்று கூறினார். எனினும் அரசு மேற்கொண்ட எந்த ஒரு நடவடிக்கை பற்றியும் வெளிப்படையாக அவர் கூறவில்லை.

தடை விதிக்க மறுத்துவிட்டது

எஸ்.ஐ.ஆர் நடைமுறகள் தொடர்பாக பெரும் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+