அடேங்கப்பா! தினமும் வெறும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிங்க போதும்.. சூப்பர் நன்மைகள் காத்திருக்கு
டெல்லி: ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் அதிகரித்து வரும் சூழலில், பீட்ரூட் ஜூஸின் முக்கிய நன்மையைப் பார்ப்போம்..
இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையை நடத்த ஏதுவாக வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே தேவையான அனைத்தையும் வாங்கும் வசதியும் இப்போது உள்ளது.
இதன் காரணமாக உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதைச் சமாளிக்கவே நாம் சத்தான உணவை எடுத்துக் கொள்வது கட்டாயமாகிறது.

பீட்ரூட் ஜூஸ்
சத்தான காய்கறிகள் பட்டியல் என எடுத்துக் கொண்டால் அதில் பீட்ரூட்டை தவிர்க்க முடியாது. பீட்ரூட் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். அதை யாராலும் மறுக்க முடியாது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. தற்போது நடந்த ஒரு ஆய்வில் தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது என்பது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆய்வு
மான்செஸ்டரில் நடந்த பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டி மாநாட்டில் இந்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ரூஸை குடிக்கும் போது, இதய நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியின் அறிகுறிகளை பீட்ரூட் சாறு குறைக்கிறது. இந்த ஆய்வில் மொத்தம் 114 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஏழு நாட்களுக்குத் தினமும் காலையில் 140 மில்லி பீட்ரூட் ஜூஸை குடித்தனர். அவர்களில் பாதிப் பேர் நைட்ரேட் அதிகம் உள்ள ஜூஸையும் குடித்தனர், மற்ற பாதிப் பேர் நைட்ரேட் நீக்கப்பட்ட ஜூஸையும் குடித்தனர்.

நல்ல ரிசல்ட்
இந்த இரண்டு குழுவில் நைட்ரேட் நிறைந்த ஜூஸைக் குடித்த குழுக்களின் ரத்தம், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் அதிக அளவு நைட்ரிக் ஆக்சைடு இருந்தது. இவர்களின் ரத்த நாளங்களில் இருந்த பாதிப்பு குணமடைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரத்த நாள கொப்புளங்களிலிருந்து திரவ மாதிரிகளில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் மூன்று நாட்களுக்குப் பிறகு குறைவாக இருந்துள்ளது.

எப்படி
நைட்ரிக் ஆக்சைடு இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும். இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இது ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது மற்றும் உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நைட்ரிக் ஆக்சைட்டின் அளவு குறைவாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளதால் இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது.

அடுத்த ஆய்வு
நைட்ரிக் ஆக்சைட்டின் அதிகமாக உள்ளதே ரத்த நாளங்களில் இருந்த பாதிப்பு விரைவாகக் குணமடைய உதவியது. அதிக நைட்ரேட் கொண்ட அனைத்து வகை உணவுகளும் இதேபோன்ற விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்தும் அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications