Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலோ கழுதையாரே! லாக்டவுனின்போது மாஸ்க் போடாம ஏன் வெளியே வந்தீங்க?.. மைக்கை நீட்டிய அதிரடி நிருபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாஸ்க் போடாம அதுவும் லாக்டவுன் நேரத்தில் ஏன் வெளியே வந்தாய் என நிருபர் ஒருவர் மைக்கை நீட்டி பதில் கேட்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஏன் மாஸ்க் அணியவில்லை ? கழுதையிடம் கேள்வி கேட்ட நிருபர்

    கொரோனாவால் இந்தியாவில் 12 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    எனினும் இந்த தடுப்பு மருந்துகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகாரம் செய்யப்படும் வரை நோய் பரவாமல் தடுக்க மாஸ்க் அணிவதையும், சமூக விலகலை கடைப்பிடிக்கவும் ஹூ அறிவுறுத்தியுள்ளது.

    அவசியம்

    அவசியம்

    இந்த நிலையில் கழுதையிடம் ரோட்டில் அமர்ந்து ஒருவர் பேட்டி எடுத்த விவகாரம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை யாரும் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வர அனுமதியில்லை. இந்த நிலையில் ஒருவர் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    பேசவில்லை

    பேசவில்லை

    அவர் முகத்தில் மாஸ்க் அணியாமல் அரசு விதித்த ஊரடங்கு நேரத்திற்கான விதிகளை மீறியிருந்தார். அவரிடம் நிருபர் சென்று நீங்கள் ஏன் மாஸ்க் அணியவில்லை. அதிலும் இது இரவு ஊரடங்காச்சே என கேட்டார். அதற்கு அவர் பதில் ஏதும் பேசவில்லை.

    மைக்கை நீட்டிய நிருபர்

    மைக்கை நீட்டிய நிருபர்

    இந்த நிலையில் சாலையில் ஒரு கழுதை சென்று கொண்டிருந்தது. அந்த கழுதையை மடக்கிய நிருபர் தற்போது இரவு ஊரடங்கு நேரம். இந்த நேரத்தில் நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள். அதுவும் முகத்தில் மாஸ்க் கூட அணியவில்லை என அந்த நிருபர் கேள்வி எழுப்பிவிட்டு, மைக்கை கழுதையிடம் நீட்டினார். அப்போது அது பதில் சொல்கிறதா என பார்க்க தரையில் அமர்ந்து கொண்டார்.

    சிரித்த நபர்

    இதையடுத்து அந்த நபரிடம் போய் அந்த கழுதை நான் கேட்ட கேள்விக்கு ஏன் பதில் கூறவில்லை என கேட்டார். அதற்கு அந்த மாஸ்க் போடாத நபரோ அது கழுதை என்றார். முகக் கவசம் அணியாததால் நீங்களும் கழுதை என ஒப்புக் கொள்கிறீர்களா என கேட்டார். அந்த நபரும் என்ன செய்வது என தெரியாமல் சிரித்து விட்டு சென்றார். இது போல் அவர் மாஸ்க் அணியாதவர்களை கேள்வி கேட்ட சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+