Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசி செலுத்தியவர்கள் யார்? லீக்கான டேட்டா.. டெலிகிராமில் கசிந்த ஆதார், செல்போன் எண்கள் -எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு கோவின் (CoWIN) செயலி உருவாக்கப்பட்ட நிலையில், இதில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட எம்.பி, எம்.எல்ஏக்கள் உட்பட பொதுமக்கள் பலரின் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் டெலிகிராமில் லீக் ஆகியுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உக்கிர தாண்டவம் ஆடிய போது ஆபத்பாந்தவனாக தடுப்பூசிகள் கண்றியப்பட்டது. இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக கையாளவும் யாரும் விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் கோவின் (CoWIN) செயலியை அறிமுகப்படுத்தியது.

Reports says details of the people who registered on CoWINs app have been leaked through Telegram

இந்த செயலி மூலமாக தடுப்பூசிக்கான அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து கொள்வதோடு அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்று இருந்தன. தடுப்பூசி செலுத்திய பிறகு சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்காக பொதுமக்களின் செல்போன் எண், அடையாள சான்றாக, ஆதார், பான், வாக்களார் ஐடி உள்ளிட்ட ஏதாவது ஒன்று கோரப்பட்டன.

ஆனால் அப்போதே இந்த தரவுகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகளால் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், டெலிகிராம் 'பாட்' இல் கோவின் செயலியில் இருந்து தனிப்பட்ட தரவுகள் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, ஒருவரின் செல்போன் எண்ணை குறிப்பிடுவதன் மூலம், அந்த எண் தொடர்பாக கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த ஒருநபரின் தரவுகள், அடையாள விவரங்கள் என அனைத்தும் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக செய்திகள் பரவின.

Reports says details of the people who registered on CoWINs app have been leaked through Telegram

ஒரே செல்போன் எண்ணை கொடுத்து குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தால், குடும்ப நபர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒரே கிளிக்கில் மொத்தமாக வந்து விழுந்தன. அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களின் தனிப்பட்ட தகவல்களும் கசிந்துள்ளது மிகப்பெரும் தரவு கசிவாக பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ராஜ்யசபா எம்.பி.க்கள் சஞ்சய் ராவத் மற்றும் டெரெக் ஓ பிரையன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களின் தகவல்களும் கசிந்துள்ளன. வெளியே கசிந்த தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கோவின் செயலி பாதுகாப்பானது என்று கூறிய செயலியின் தலைவர் ராம் சேவக் ஷர்மாவின் தகவல்களும் கசிந்திருக்கின்றன என்பதுதான்.

இந்த விவகாரம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த பிரச்னையை அமைச்சகம் அறிந்திருக்கிறது. இந்த டேட்டாக்கள் கோவின் தளத்திலிருந்து கசிந்திருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் தளத்திலிருந்து கசிந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியிருந்தார். மிகவும் பாதுகாப்பான செயலி என்று என்று சொல்லப்பட்ட கோவின்-லிருந்து தகவல்கள் வெளியில் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு கோவின் தளத்தில் உள்ள தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கோவின் தளத்தில் இருந்து தகவல் கசிந்ததாக பரவும் தகவல்கள் விஷமத்தனம் கொண்டவை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகள் கசிந்ததாக வெளியான் விவகாரம் குறித்து சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In ம் விசாரணையை தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+