டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு.. கம்பீரமாக பங்கேற்க இருக்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி
டெல்லி: வருகிற 26ம் தேதி நாட்டின் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா பேரணியில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார்.

இந்தக் குடியரசு தின விழாவின் போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்லும். குடியரசு தின விழா ஏற்பாடுகளை கடந்த 2 மாதங்களாக முழு வீச்சில் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், குடியரசு தினவிழாவின் போது தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெறுகிறது.
இந்த முறை தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. கலை நயத்துடன் தயாராகி உள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம் பெறுகிறது. மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள், மனுநீதி சோழன் குறித்த ஊர்தி, குடவோலை முறையை காட்சிப்படுத்தும் அலங்காரா ஊர்திகள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, நடப்பு ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் டெல்லி, பஞ்சாப் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கு பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.. முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெற்றது. எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைத்தது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications