சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணிகள் திடீர் நிறுத்தம்! கைவிரித்த மீட்பு படை.. நடந்தது என்ன?
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்தவர் சைதை துரைசாமி. இவர் சென்னையின் முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார்.

தற்போது அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமியை நடத்தி வருகிறார். இதன் மூலம் இலவசமாக மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சியை அளித்து வருகிறார்.
இவருடைய மகன் வெற்றி துரைசாமி (45). இவர் என்றாவது ஒரு நாள் எனும் படத்தை இயக்கியுள்ளார். தனது தந்தையின் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்த திரில்லர் படத்திற்கு லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்துடன் வெற்றி சென்றார்.
அங்கு ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். வண்டியை டென்சின் என்பவர் இயக்கினார். கின்னார் மாவட்டம் கஸாங் நலா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென காரின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றங்கரையில் கவிழ்ந்தது. ஆற்றில் காரின் சக்கரம் தெரிந்ததை அடுத்து அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலறிந்த போலீஸார் தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து போய் தேடுதல் பணிகளை தொடர்ந்தனர். ஆற்றில் மூழ்கிய காரை மீட்ட போது அதில் டென்சின் சடலமாக காணப்பட்டார். வெற்றியின் உதவியாளர், அங்கிருந்த பாறைகளில் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் பனி மூட்டம் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது. எனவே தற்போது மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சைதை துரைசாமி மகன் வெற்றி குறித்து தகவலறிய 2 நாட்கள் ஆகும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications