ரிசர்வ் வங்கி நிதி கொள்கைக் குழு கூட்டம்! ரெப்போ விகிதம் உயர வாய்ப்பு? நிபுணர்கள் கருத்து என்ன?
டெல்லி : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், ரெப்போ விகிதங்களை 40 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுவின் மூன்று நாள் கூட்டம் ஜூன் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், பொருளாதார நிபுணர்கள், வாங்கியாளர் தொடங்கி வாடிக்கையாளர்கள் வரை அனைவரின் பார்வையும் அதன் மீதே உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் கூட்டத்தின் போது இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில், ஆஃப்-சைக்கிள் கொள்கை மறுஆய்வில், RBI அதன் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. மே 4 அன்று 4.40% ஆக உள்ள நிலையில், பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணவீக்கம் உயர்வு
பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79% என இருக்கும் நிலையில், இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. மறுபுறம், மொத்த விற்பனை பணவீக்கம் அதே மாதத்தில் 15.1% என்ற சாதனை அளவை எட்டியது. எனவே, சாதாரண குடிமக்களுக்கு விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கவனம் செலுத்துகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் எல்பிஜி விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு நடவடிக்கை
மத்திய அரசு சமீபத்தில் எரிபொருள் விலையை குறைத்த நிலையிலும், சில எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியது, கோக்கிங் நிலக்கரிக்கான சுங்க வரியை குறைத்தது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த குறுகிய காலத்திற்குள் ரிசர்வ் வங்கி மற்றொரு வட்டி விகித உயர்வைத் அறிவிக்காது என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜிடிபி வளர்ச்சி
2022 நிதியாண்டில் நாடு 8.7% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது ஒரு நம்பிக்கையான காரணியாக இருந்தாலும், அதன் 2022ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி மூன்றாம் காலாண்டை விட சற்றே குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆய்வாளர்கள் ரெப்போ தொடர்பால கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications