"எது சமைக்கணுமா.. சொல்லவே இல்ல" குக்கிங் ஷோவுக்கு கடை பிரியாணி எடுத்து வந்த பெண்! ஸ்டன் ஆன நடுவர்கள்
குக்கிங் ஷோ ஒன்றில் நடந்த காமெடி சம்பவம் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது
டெல்லி: குக்கிங் ஷோக்களின் அடிப்படை விதி என்னவென்றால், உணவைப் போட்டியாளர்கள் அப்போது செய்து தர வேண்டும். எந்தவொரு பொருளையும் ஹோட்டலில் இருந்து வாங்கக் கூடாது. ஆனால், பாகிஸ்தானில் நடந்த குக்கிங் ஷோவில் பெண் ஒருவர் அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
உலகெங்கும் இருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையானது குக்கிங் ஷோ. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் சமையல் போட்டி தொடர்பான ரியாலிட்டி ஷோ இருக்கும்.
இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கனெக்ட் ஆகும் ஷோ என்பதால்.. பலரும் இதை விரும்பி பார்ப்பார்கள். அப்படி நடந்த ஒரு குக்கிங் ஷோவில் தான் மிகப் பெரிய காமெடி சம்பவம் நடந்துள்ளது.

குக் வித் கோமாளி
இப்போது தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் ரொம்பவே பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி இருக்கிறது. சமையல் என்றால் என்னவென்றே தெரியாத கோமாளிகளுடன் இணைந்து போட்டியாளர்கள் சமைப்பது தான் குக் வித் கோமாளி. காமெடி கொட்டி கிடப்பத்தால் உடனடியாகவே இது தமிழ்நாட்டில் பெரியளவில் ஹிட் அடித்தது. மூன்று சீசன்களை தாண்டி நான்காவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இணையத்தைப் பார்த்தாலே நெட்டிசன்கள் இதைக் கொண்டாடித் தீர்ப்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

ரியாலிட்டி ஷோ
குக் வித் கோமாளி ஷோவில் கூட கோமாளிகள் தான் காமெடி செய்வார். ஆனால், பாகிஸ்தானில் நடக்கும் ஒரு குக்கிங் நிகழ்ச்சியில் போட்டியாளரே மிகப் பெரிய காமெடி செய்துள்ளார். அவர் செய்ததைப் பார்த்து நடுவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. ஒரு நிமிடம் அவர்களே பேச முடியாமல் ஸ்டன் ஆகிவிட்டனர். அப்படி என்ன நடந்தது.. யார் இந்த காமெடி சம்பவத்தைச் செய்தது.. என்பதைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தான்
பொதுவாக அனைத்து குக்கிங் ஷோக்களின் அடிப்படை மற்றும் சொல்லப்படாத விதி என்னவென்றால், உணவைப் போட்டியாளர்கள் அப்போது செய்து தர வேண்டும். எந்தவொரு பொருளையும் ஹோட்டலில் இருந்து வாங்கக் கூடாது. டிவியில் இதுவரை நாம் பார்த்த அனைத்து சமையல் நிகழ்ச்சிகளிலும் நாம் இதையே பார்த்துள்ளோம். ஆனால், பாகிஸ்தான் பெண் போட்டியாளர் ஒருவருக்கு இந்த விதி தெரியவில்லை போல.. டிவி வரலாற்றிலேயே முதல்முறையாக குக்கிங் ஷோ நிகழ்ச்சியில் கடையில் வாங்கிய உணவை இவர் நடுவர்களுக்குக் கொடுத்துள்ளார்.

தி கிச்சன் மாஸ்டர்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 'தி கிச்சன் மாஸ்டர்' என்ற பாகிஸ்தானியச் சமையல் நிகழ்ச்சியில் தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒரு பெண் போட்டியாளர் ஒருவர் நடுவர்களுக்குப் பிரியாணியை எடுத்து வந்துள்ளார். இருப்பினும், அதைத் தட்டிலோ அல்லது கப்பில் வைத்து எடுத்து வரவில்லை. மாறாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் சிறிய பார்செல் கண்டெய்னரில் வைத்து எடுத்து வந்துள்ளார். முதலில் நடுவர்களுக்கு என்னவென்று புரியவில்லை. அவர்கள் இப்படி வித்தியமாக பிரசென்ட் செய்கிறார் என்றே நினைத்துள்ளனர்

ஹோட்டல் பிரியாணி
சில நொடிகள் கழித்துத் தான் அவர் அந்த உணவைத் தயாரிக்கவில்லை என்று தெரிந்துள்ளது. ஏன் தட்டில் எடுத்து வரவில்லை என்று நடுவர்கள் கேட்கவே.. அப்போது தான் அந்த பெண் போட்டியாளர் தான் பிரியாணியை சமைக்கவில்லை என்றும் அருகே இருந்த ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கி வந்ததாகவும் தெரிவிக்கிறார். இதைக் கேட்டதும் முதலில் நடுவர்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. முதலில் அவர் விளையாட்டிற்குச் சொல்கிறார் என்றே நினைத்துள்ளனர். அதன் பின்னரே நிஜமாகவே அந்த பெண் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்துள்ளதை உணர்ந்துள்ளனர்.

கடுப்பான பிரியாணி
இதனால் டென்ஷனான நடுவர்கள், ஹோட்டலில் வாங்கி வந்த உணவை வைத்துக் கொண்டு உங்கள் சமையல் திறனை எப்படி மதிப்பிட முடியும் என்று கேட்டனர். மேலும், இது ஹோம் குக்குகளுக்கான நிகழ்ச்சி என்றும் ரெஸ்டாரண்டில் இருந்து வாங்குவதற்குப் பதிலாக நெட்டில் பார்த்துக் குறைந்தது ஒன்றையாவது சமைத்து எடுத்து வந்திருக்கலாமே என்று அதிருப்தியடைந்து கூறின்றனர். இதனால் கடுப்பான அந்த போட்டியாளர், "எனக்குச் சமைக்கத் தெரியும். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யாரும் சமைத்துத்தான் உணவைக் கொண்டு வர வேண்டும் சொல்லவில்லை" என்று கூலாக கூறியுள்ளார்.

நடுவர்கள்
இதைக் கேட்டுக் கடுப்பான நடுவர்கள், அவரை அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லியுள்ளனர். இருப்பினும், அந்த பெண் அங்கிருந்து கிளம்பாமல், "நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பிரியாணியை வாங்கியுள்ளேன். இதைச் சுவைத்து எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொல்லியே தீர வேண்டும்" என வற்புறுத்தினார்.. தொடர்ந்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்க.. நடுவர் ஒருவர் கடுப்பாகி அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications