இனி சுங்கச்சாவடிகளே இருக்காது! 2 வாரங்களில் அமலுக்கு வரும் சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை
டெல்லி: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டோல் கட்டண வசூலை நவீனமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி டோல் கட்டணம் செலுத்தச் சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை. ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டணம் தானாகக் கழிக்கப்படும். அடுத்த 2 வாரங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பில் நெடுஞ்சாலைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாட்டில் எந்தவொரு இரு முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்க நெடுஞ்சாலைகளே உதவும். அதேநேரம் நெடுஞ்சாலைகள் பயணங்களுக்கு இத்தனை காலம் சுங்கச் சாவடிகள் இடையூறாக இருக்கும்.

சுங்கச்சாவடிகள்
பல இடங்களில் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிநிலை இருக்கிறது. அதுவே பெரிய இடையூறு. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்ட் டேக் முறையைக் கொண்டு வந்தது. இப்போது பாஸ்ட் டேக் முறையால் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் பெருவாரியாகக் குறைந்துள்ளது.
15 நாட்களில் புதிய முறை
இதற்கிடையே அடுத்தகட்டமாக நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணம் உருவாக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுக்க சாட்டிலைட் அடிப்படையிலான புதிய சுங்க கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலிக்கும் முறை என்பது அடுத்த 15 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்த புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் இனி வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்டிலைட் அடிப்படையில் சுங்கக் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும். இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பயணிக்கலாம்.
நிதின் கட்கரி
இப்போது பாஸ்ட் டேக் முறை அமலுக்கு வந்துவிட்ட பிறகும் பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருக்கிறது. அந்தப் பிரச்சினையைச் சரி செய்யவும் எரிபொருளைச் சேமித்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தைக் குறைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளது
இந்த புதிய திட்டம் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் என்றும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இனி வாகனங்கள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறதோ.. அதற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து டோல் கட்டணம் நேரடியாகக் கழிக்கப்படும்" என்றார். மேலும், இன்னும் 15 நாட்களில் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது ஏன் முக்கியம்
இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் வந்தால் அது நமது நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு மிகப் பெரிய பூஸ்ட்டை தரும். நெடுஞ்சாலைகளில் பயணங்கள் இன்னும் வேகமாகவும் திறன் மிக்கதாகவும் மாறும். சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் என்பது முதலில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றே தெரிகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications