ரிஷப் பண்ட் எப்படி இருக்கிறார்? மூளையில் எம்ஆர்ஐ ஸ்கேன்.. ரிப்போர்ட் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் அருகே கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அந்த முடிவுகள் சொல்வது என்ன என்பதில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ரிஷப் பண்ட் நல்லபடியாக குணமாகி மீண்டும் நம் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் தனது தாயுடன் புத்தாண்டை கொண்டாட விரும்பினார். இதற்காக டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சாலை மார்க்கமாக காரில் தனியே புறப்பட்டார்.

நேற்று காலை 5.30 மணி அளவில் உத்தரகண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கின் நர்சன் எல்லையில் இவரது கார் சென்று கொண்டிருந்தது. மிகவும் வேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் போய் மோதியது.

கார் ஜன்னல்

கார் ஜன்னல்

இதில் கார் ஜன்னலின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் கீழே வந்து விழுந்தார். இதில் அவருக்கு முதுகு, தலை, கண் பகுதி உள்ளிட்டவற்றில் படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் பிழைத்ததே மறுபிறவிதான் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

போலீஸார்

போலீஸார்

விபத்து குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த இடமே போர்க்களமாக காட்சியளிப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த கார் உருக்குலைந்து முற்றிலும் எரிந்து விட்டது என்றும் தெரிவித்தனர். ரிஷப் பண்ட் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே வராமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே பயமாக இருக்கிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜவ்வு கிழிந்துவிட்டது

ஜவ்வு கிழிந்துவிட்டது

ரிஷப் பண்டிற்கு முழங்கால் ஜவ்வு கிழிந்துவிட்டது. அது போல் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் முன்பு மாதிரி விளையாட பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது. இத்தனை அடி பட்டாலும் ரிஷப் பண்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையின் செயல்பாடுகள்

மூளையின் செயல்பாடுகள்

இந்த நிலையில் அவரது மூளையின் செயல்பாட்டையும் முதுகுதண்டுவடத்தில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த முடிவுகளில் எந்த ஆபத்தும் இல்லை என்று உள்ளது. எனினும் அவரது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படுகிறது. முட்டி மற்றும் கணுக்காலில் வீக்கமும் வலியும் இருப்பதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+