போக்குவரத்தை எளிதாக்க வருகிறது ‘ரோப்வே’.. வானில் 1200 கி.மீ தூரத்திற்கு கயிறு பாதை: நிதின் கட்கரி
டெல்லி: உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலை இந்தியாவில் அமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பர்வதமாலா பரியோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 200 ரோப்வே சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அதிக செலவு கொண்டது என்பதால், அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக மலைப்பகுதிகளில் சுற்றுலாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். பாதுகாப்பில் எந்த சமரசமும் இன்றி உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மூலம் செலவு குறைந்த அளவில் ரோப்வேக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து எளிதாக அமைவதுடன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது அமையும்” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் 30 சதவீத பகுதிகள் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளன. அங்கு சாதாரண சாலை மற்றும் ரயில் பாதைகள் உருவாக்குவது என்பது மிக கடினமான காரியம். அந்த இடங்களில் ரோப்வே மூலம் சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், மலைப்பகுதிகளான அமர்நாத், காமாக்யா, கேதார்நாத் மற்றும் மஹாகாலேஷ்வர் கோவில்கள் என இந்தியா முழுவதும் தற்போது, 120 கி.மீ.க்கு மேல் ரோப்வே இணைப்புக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications