டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.10 போல் ரூ.20 நாணயம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

    டெல்லி: 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் மத்திய பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து 5 ரூபாய், 10 ரூபாயை போல் 20 ரூபாய் நாணயம் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    விரைவில் வரும்

    விரைவில் வரும்

    கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த நாணயங்களை அறிமுகம் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நாணயங்கள் விரைவில், பொது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    செல்லாத 10 ரூபாய் நாணயம்

    செல்லாத 10 ரூபாய் நாணயம்

    ஏற்கனவே வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயமே தொங்கலில் உள்ளது.பேருந்துகளில் டிக்கெட் பெற, கடைகளில் பொருட்கள் வாங்க, நடை பாதை வியாபாரிகள் என யாரிடம் கொடுத்தாலும் 10 நாணயங்கள் செல்லாது, வேண்டாம் நோட்டாய் கொடுங்கள் என வாக்குவாதம் செய்து வந்தனர்.

    மக்கள் தயக்கம்

    மக்கள் தயக்கம்

    10 ரூபாய் நாணயங்கள் செல்லும் தைரியமாக வாங்கலாம் என ஆர்பிஐ அறிக்கை விட்ட பின்னரும் தீராமல் இருந்தது இந்த 10 ரூபாய் நாணயத்தின் பஞ்சாயத்து தீராமல் இருந்தது. இன்றும் பல நகரங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ?

    என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ?

    இந்நிலையில் 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது என்னென்ன பஞ்சாயத்தை கூட்டப்போகிறதோ என இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர் மக்கள்.

    English summary
    Finance minister said in Parliament that A new series of coins of Re 1, Rs 2, Rs 5, Rs 10, Rs 20 easily identifiable to the visually impaired were released by the PM on 7th March 2019. These coins will be made available for public use shortly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X