3 கி.மீக்கு 760 கட்டணம்! இந்தியாவிலேயே குறைந்த தொலைவு கொண்ட ரயில் ரூட்.. எங்கே இருக்கு தெரியுமா?
டெல்லி: இந்தியாவிலேயே எக்ஸ்பிரஸ் ரயில்களில் மிக குறைந்த தூரம் கொண்ட ரயில் ரூட் எங்கே இருக்கிறது. வெறும் 3 கிலோ மீட்டர் மட்டுமே தொலைவு கொண்ட இந்த ரூட்டில் பயண தூரத்தை 9 நிமிடத்தில் எட்டிவிடலாம்.. ஆனால், இந்த 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உலக அளவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தினம் தோறும் ரயில்களில் 2.50 கோடி பயணிகள் பயணம் செய்கிறார்கள். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு, டாய்லட் வசதி போன்றவற்றால் தொலை தூரங்களுக்கு செல்ல பயணிகள் முதலில் தேர்வு செய்வதை ரயில்களைத்தான்.

குறைந்த தூரம்: இதனால், இந்திய பயணிகளிடம் இரண்டறக் கலந்ததாக ரயில்வே உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் பரப்பளவில் 7-வது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மிகவும் தொலை தூர ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவிலேயே குறைந்த தூரம் கொண்ட ரயில்வே ரூட் எது என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.. அது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.. லோக்கல் ரயில்களின் ரூட்களை இதில் நாம் சொல்லப்போவது இல்லை. அதிவிரைவு ரயில்கள் போன்ற தொலை தூரங்கள் செல்லும் ரயில்களில் மிகவும் குறுகிய தொலைவுக்கு புக்கிங் செய்யும் ரூட் எது என்பது பற்றித்தான் பார்க்க போகிறோம்..
நாக்பூர் - அஜ்னி: உதாரணத்திற்கு சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் போன்ற குறுகிய தொலைவிற்கு நீங்கள் டிக்கெட் புக் செய்ய முடியாது. ஆனால், ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் வசதி கொண்ட குறுகிய தொலைவு கொண்ட ரூட் எது என்பதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.. மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து அஜ்னி இடையேயான ரூட் தான் இந்தியாவில் மிகவும் குறைந்த தொலைவு கொண்ட ரயில்வே ரூட் ஆக அறியப்படுகிறது.
டிக்கெட் கட்டணம்: வெறும் 3 கிலோ மீட்டர் மட்டுமே தொலைவு கொண்ட இந்த ரூட்டில் பயண தூரத்தை 9 நிமிடத்தில் எட்டிவிடலாம்.. ஆனால், இந்த 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா? பொதுப்பெட்டியில் பயணம் செய்வதற்கே ரூ. 60 கட்டணமாம். அதுவே ஸ்லீப்பர் கோச் என்றால் 175 ரூபாயும், மூன்றாம் வகுப்பு ஏசி என்றால் 505-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே இரண்டாம் வகுப்பு ஏசி என்றால் ரூ.760 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்லீப்பர் கோச்: ரயிலை பிடித்து ஸ்லீப்பர் கோச்சில் ஏறி, இருக்கை எது என கண்டுபிடிப்பதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடுமே இதற்கு ஏன் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என மனதில் நினைப்பது தெரிகிறது.. என்னதான் ரயில்வேயில் புக்கிங் வசதி இருந்தாலும் இந்த ரூட்டில் செல்லும் பயணிகள் பெரும்பாலும் பொதுப்பெட்டியில்தான் பயணம் செய்கிறார்கள்.. முன்பதிவு செய்து பயணிப்பது இல்லை. இந்த வழித்தடத்தில் அதிகம் ரயில்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications