டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கும் பலன்.. ரூ.8,767 கோடியில் வீட்டு வசதி திட்டம்! ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய அரசு ஊக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ரூ.8,767 கோடி மதிப்புள்ள 81 வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டம் (SWAMIH) பற்றி, வியாழக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

Rs 8,767 crore disbursed to complete 81 stalled housing projects

நிதி அமைச்சகத் துறைகளின் செயலாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட் லிமிடெட் மற்றும் எஸ்பிஐ கேப்ஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சீனியர் நிர்வாகிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

அப்போது, ரூ.8767 கோடி மதிப்பிலான 81 வீட்டு வசதி திட்டங்களுக்கு இந்த நிதியத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்

நாடு முழுவதும் 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான 81 திட்டங்கள் இவையாகும். சென்னை, பெங்களூர், என்.சி.ஆர், எம்.எம்.ஆர், புனே போன்ற பெரிய நகரங்கள் மற்றும் கர்னல், பானிப்பட், லக்னோ, சூரத், டேராடூன், கோட்டா, நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், விசாகப்பட்டினம், சண்டீகர் போன்ற 2ம் நிலை நகரங்களில், பரவலாக இத் திட்டங்கள் அமைந்துள்ளன.

English summary
The government has disbursed Rs 8,767 crore under the special window for completion of 81 stalled residential projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X