மோடிக்கு எதிராக களமிறங்கும் ஆர்எஸ்எஸ்.. புதிய பிரதமர் வேட்பாளரை தேடுகிறதா பாஜக?!
2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக புதிய பிரதமர் வேட்பாளரை தேட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
டெல்லி: 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக புதிய பிரதமர் வேட்பாளரை தேட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என்று பாஜகவிற்கு உள்ளேயே இப்போது எதிர்ப்பு குரல்கள் எழ தொடங்கியுள்ளது.
நேற்றுதான் இதுகுறித்த செய்திகள் வரத்தொடங்கியது. பிரதமர் மோடியை பாஜக அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கு சில காரணங்களும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

கடிதம் எழுதினார்
இந்த பிரச்சனை கொஞ்சம் பெரிதாக தொடங்கியதும், மகாராஷ்டிராவை சேர்ந்த ''விஎன்எஸ்எஸ்எம்'' என்ற விவசாய அமைப்புகளின் தலைவர் கிஷோர் குமார் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பாஜக மீண்டும் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது. அப்படி அறிவித்தால் அது பாஜகவிற்குத்தான் தோல்வியை தரும். பாஜக வெற்றிபெற வேண்டும் என்றால் வேறு ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் திட்டம்
ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதே திட்டத்தில் இருப்பதாகத்தான் கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் சில தலைவர்கள் பிரதமர் மோடி மீதும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீதும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவேளை இவர்கள் இருவரையும் மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றது.

பாஜக அதிருப்தி
ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் மோடியின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக கடைசியாக நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் பாஜக சரியாக செயலாற்றவில்லை. வரிசையாக பல தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. பாஜகவின் இந்த மோசமான தோல்வி சில முக்கிய தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய தலைவர்கள்
அதேபோல் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறியதும் மூத்த தலைவர்கள் அத்வானி போன்றோர் ஓரம்கட்டப்பட்டதும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

மக்கள் அதிருப்தி
அதேபோல் மக்கள் அதிருப்தியில் இருப்பதையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக பாஜக மீது மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மோடியை மாற்றுவதன் மூலம் அந்த அதிர்ச்சியை திசை திருப்ப முடியும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நினைக்கிறது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்த கூட வாய்ப்புள்ளது.

யார் அவர்?
இந்த நிலையில் மோடிக்கு பதிலாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஆர்எஸ்எஸ் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர்தான். அவர் நீண்ட காலம் அந்த அமைப்பில் இருந்தவர். அதனால் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு பெரிய அளவில் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications