அடேங்கப்பா ஆச்சரியம்.. ஆர்எஸ்எஸ்-ஓவைசி "இணைந்து" வரவேற்கும் ஒரே விஷயம்
டெல்லி: ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதனை எதிர்க்கிற மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசியும் ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஓரின சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்துக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3:2 என்ற அடிப்படையில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இறுதியாக, ஓரினச் சேர்க்கை உறவாளர்கள் ஒரே வீட்டில் தங்கலாம்; அவர்கள் மீது அரசு தரப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது; ஆனால் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றம்தான் திருமண சட்ட திருத்தம் மூலம் முடிவு செய்ய வேண்டும் என்கிற இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்: இதனிடையே சித்தாந்த ரீதியாக எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசியும் இந்த தீர்ப்பு தொடர்பாக ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் சுனில் அம்பேகர் தமது எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பானது இது தொடர்பாக ஆழ்ந்து விவாதித்து உரிய முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அதில், ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தர மறுத்தது வரவேற்புக்குரியது; இது ஒன்றும் அடிப்படை உரிமையும் அல்ல. ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் பதிவுக்குரியதும் அல்ல என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓவைசியின் கருத்து: மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி தமது எக்ஸ் பக்கத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேதான் திருமணம் நடைபெற வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் தர மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இதில் பாகுபாடு எங்கே வருகிறது என தெரியவில்லை? என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனிநபர் சட்டங்கள் உள்ளிட்டவற்றின் கீழ் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது; ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தை இஸ்லாத் ஏற்கவில்லை எனவும் ஓவைசி சுட்டிக்காட்டியுள்ளார்.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications