CJP பற்றி பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்! இப்படி சொல்லுவார்னு யாரும் எதிர்பார்க்கல!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி (CJP) போராட்டங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன. இப்படி இருக்கையில், இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடந்து வரும் தலைமை தேர்தல் ஆணையர் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும், ஐநா நிபுணர்களின் விமர்சனங்கள் குறித்தும் ரூபியோ பேசியிருக்கிறார்.

Rubio Brushes

தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட இருப்பதாகவும் கூறி.. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்புகள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தப் போராட்டங்களை கையாள்வதில், இந்திய அரசு அதிகப்படியான அத்துமீறல்களை செய்வதாக கூறி.. 20க்கும் மேற்பட்ட ஐநா மனித உரிமை நிபுணர்கள் வெளியில் பேசி இருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க காவல்துறை நடந்து கொள்ளும் விதம் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இப்படி இருக்கையில் இது குறித்து பேசிய ரூபியோ, "ஐநா நிபுணர்கள் என்ற வார்த்தையே ஒரு முரண்பாடான சொல்! அவர்களின் விமர்சனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கிறது. அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடாது. இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. இதை இந்திய மக்களை தீர்மானிக்க வேண்டும். இந்தியா ஜனநாயக நாடாகும், இங்கு தேர்தல்கள் நடக்கின்றன. அரசியல் கருத்து வேறுபாடுகளும், மக்கள் தங்கள் கருத்துக்களின் வெளிப்படுத்துவதும்.. ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்!

ஐரோப்பாவில் நடப்பது போன்ற பொது சொத்துக்களை சேதப்படுத்தும் வன்முறை கலவரங்களைப் பற்றி நான் பேசவில்லை. அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது.. ஒரு நாட்டில் ஆரோக்கியமான அரசியல் உரையாடல் நடப்பதற்கான அடையாளம் ஆகும்" என்று கூறியிருக்கிறது.

மனித உரிமைகள் என்ற பெயரில், பிற நாடுகள் மீது அரசியல் அழுத்தங்களை உருவாக்குவதையோ அல்லது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறி வைப்பதையோ.. ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐநாவுக்கான இந்திய தூதரக அதிகாரி பக்ரா தம்ராகர் தெரிவித்து இருந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத மற்றும் முழுமையற்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்தியாவின் மீது வைக்கப்படும் எதிர்மறையான குற்றச்சாட்டுகளை.. இந்தியா மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+