லோக்சபா தேர்தல்: கேரளா, கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கு "அடி.." Democracy Times கருத்துக் கணிப்பு
டெல்லி: இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்பது குறித்து Democracy Times கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடாகா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மத்தியில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

"இந்தியா கூட்டணி" என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதனால் வரும் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக அமையும் என்று தெரிகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து சில கட்சிகள் தற்போதே பேச ஆரம்பித்து விட்டன. தேர்தல் களம் சூடு பிடிக்க ஆயத்தமாகி வரும் சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வருகின்றன.
யாருக்கு வெற்றி?: அந்த வகையில், இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்பது குறித்து Democracy Times Network நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடாவில் இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து Democracy Times Network கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு மாநிலங்களிலுமே ஆளும் கூட்டணி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார். அதேபோல் கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
கேரளா கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
மொத்த தொகுதிகள்: 20
யுடிஎப்: 16 இடங்கள் (44 % வாக்குகள்)
எல்.டி.எப்: 04 இடங்கள் (35 %)
என்.டி.ஏ: 00 (15%)
பிற கட்சிகள்: 00 இடங்கள் (6%)
கர்நாடகா கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
மொத்த தொகுதிகள்; 28
என்.டி.ஏ: 17 தொகுதிகள்
ஐ.என்.சி: 11 தொகுதிகள் (42 % )
பிற கட்சிகள்: 00 இடங்கள் (9%).
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்!












Click it and Unblock the Notifications