Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிட்டிகளை விட கிராமங்களில்தான் ஆண், பெண்களுக்கு செக்ஸ் பார்ட்னர்கள் அதிகம்! அதிர வைத்த சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார நல அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவின்படி இந்தியாவில் நகர்புறங்களை விட கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு தான் பாலியல் உறவுக்கான ‛செக்ஸ் பார்ட்னர்கள்' அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

Recommended Video

    கண்டிப்பை மீறி காவலருடன் கள்ளக்காதல்… மகளை எரித்து கொன்ற கொடூர பெற்றோர்!

    இந்தியாவில் பொதுமக்களின் வாழ்க்கை முறை தொடர்பாக தேசிய குடும்ப சுகாதார நல அமைப்பு அவ்வப்போது சர்வே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பாலியல் உறவு தொடர்பான சர்வே நடைபெற்றது.

    இந்த சர்வேயானது 2019 முதல் 2021ம் ஆண்டு வரை நடந்தது. பாதுகாப்பான உடலுறவு முக்கியம் என்பதாலும், இந்தியாவில் பாதுகாப்பான உடலுறவு தொடர்பான விஷயத்தை அளவீடும் நோக்கத்தில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

    கிராமங்களில் ‛செக்ஸ் பார்ட்னர்கள்’

    கிராமங்களில் ‛செக்ஸ் பார்ட்னர்கள்’

    அதன்படி 15 முதல் 49 வயதிற்குட்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவில் நகரங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், ஆண்களுக்கு தான் பாலியல் உறவுக்கான‛செக்ஸ் பார்ட்னர்கள்' அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. சர்வேயின் அடிப்படையில் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கான வாழ்நாள் ‛செக்ஸ் பார்ட்னர்கள்' 1.8 என்ற அளவிலும், நகர்புறங்களில் இது 1.5 என்ற அளவிலும் உள்ளது. மேலும் கிராமப்புற ஆண்களுக்கு 2.3 என்ற அளவிலும், நகர்புற ஆண்களுக்கு 1.7 என்ற அளவிலும் உள்ளது.

     நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகம்

    நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகம்

    மேலும் பணக்காரர்கள், ஏழைகளை விட நடுத்தவர்க்கத்தை சேர்ந்த ஆண், பெண்களுக்கு அதிக ‛செக்ஸ் பார்ட்னர்கள்'இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி wealth Quintile அட்டவணையின் அடிப்படையில் ஏழைகளாக உள்ள பெண்களுக்கான வாழ்நாள் ‛செக்ஸ்பார்ட்னர்கள்' 1.7 என்ற அளவிலும், ஆண்களுக்கு 2.1 என்ற அளவிலும் உள்ளனர். இதில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களுக்கான செக்ஸ் பார்டனர்கள் 1.9 என்ற அளவிலும், ஆண்களுக்கு 2.5 என்ற அளவிலும் உள்ளனர். பணக்காரர்களாக உள்ள பெண்களுக்கு செக்ஸ் பார்ட்னர்கள் 1.6 என்ற அளவிலும், ஆண்களுக்கு 1.7 என்ற அளவிலும் உள்ளனர்.

    பெண்களுக்கே அதிகம்

    பெண்களுக்கே அதிகம்

    மேலும் இந்தியாவில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்கள் தான் பாலியல் உறவுக்கான பார்ட்னர்களை அதிகம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களின் வாழ்நாளில் உறவு பார்ட்னர்களின் எண்ணிக்கை என்பது 2.4 என்ற அளவிலும் ஆண்களுக்கு 1.8 என்ற அளவிலும் உள்ளது.

    707 மாவட்டங்களில் சர்வே

    707 மாவட்டங்களில் சர்வே

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களை சேர்ந்த 1.1 லட்சம் பெண்களும், ஒரு லட்சம் ஆண்களும் பதில் அளித்து சர்வேயில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தான் தேசிய குடும்பநல அமைப்பு மேற்கொண்ட சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+