டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் சர்வதேச தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்யா குற்றம் சாட்டி, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக கூறி, டெலிகிராம் நிறுவனர் துரோவ் சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ஏற்கனவே ரஷ்யாவை விட்டு வெளியேறி தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாவெல் துரோவ் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் சர்வதேச தேடப்படும் பட்டியல் மற்றும் குற்றவியல் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

Telegram Founder Pavel Durov

ரஷ்யாவின் மிகவும் பிரபலமான செய்தி அனுப்பும் செயலிகளில் ஒன்றான டெலிகிராமை ரஷ்யா கட்டுப்படுத்தி வரும் நிலையில், பாவெல் துரோவ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாவெல் துரோவை தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்ததைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின் எக்ஸ் பக்கத்தில் பாவெல் துரோவ் நடு விரலைக் காட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நாசவேலை மற்றும் பயங்கரவாதச் செயல்கள், படுகொலைகள், மற்றும் இணையவழி மோசடி ஆகியவற்றைத் திட்டமிடுவதற்கு உக்ரைன் உளவு அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளால் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான சேனல்கள், உரையாடல்களை டெலிகிராம் நிர்வாகம் அகற்றவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசவேலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ரஷ்யர்களைக் கவர்ந்து ஆட்சேர்ப்பு செய்ய, டெலிகிராமில் உள்ள ஒரு பிரபலமான டேட்டிங் சாட் பாட்டை உக்ரேனிய பாதுகாப்பு படைகள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 2025 முதல் ரஷ்யா முழுவதும் அந்த சாட் பாட்டின் 12 முதல் 22 வயதுக்குட்பட்ட 46 பயனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், டெலிகிராம் செயலியை கட்டுப்படுத்த அவர்கள் போலியான காரணங்களைக் கூறுவதாகவும் பாவெல் துரோவ் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற பல பிரபலமான சமூக ஊடகத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. யூடியூப் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் வைபர் போன்ற பிரபலமான செய்தி அனுப்பும் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மற்ற நாடுகளிலும் குற்றவியல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். 2024-ல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்களை விநியோகித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவரது டெலிகிராம் தளம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் பாரிஸில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+