நேரடியாக இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு பறக்க போகுது ரயில்.. ஆஹா இது தான் ரியல் கேம் சேஞ்சர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக ரயில் சேவையை வழங்கும் வகையில் புதிய பாதையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த புதிய ரயில் வழித்தடம் உருவானால், ரஷ்யாவுக்கு இந்திய பெருங்கடலை அடைவதற்கான மாற்று பாதையாக இது அமையும். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவும் ரஷ்யாவும் பல ஆண்டுகளாகவே நட்பு நாடுகளாக இருக்கிறது. சர்வதேச அரங்கில் இரு நாடுகளுமே பல விஷயங்களை ஒன்றாக செய்துள்ளன. இந்தச் சூழலில் தான் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற ஐடியா வந்துள்ளது.

Russia India Train Russia India Train

நேரடி ரயில்

ரஷ்ய துணை பிரதமர் மராட் குஸ்னுலின், ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். ரஷ்யா தற்போது முக்கியமான கடல் வழித்தடங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை குறைக்க மாற்று போக்குவரத்து வழிகளை ஆராய வேண்டும் என்றும் குஸ்னுலின் கூறியுள்ளார்.

போஸ்பரஸ் மற்றும் ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான கடல் வழித்தடங்களில் பிரச்சினைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து ஏற்படும் நிலையில், எதிர்காலத்தில் நிலவழி போக்குவரத்து பாதைகள் முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே ரஷ்யாவில் இருந்து இந்திய பெருங்கடலை அடையும் வகையில் புதிய ரயில் பாதையை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பல நாடுகளை இணைக்கும் ரயில்

ரஷ்யா முன்வைத்துள்ள இந்த ரூட் பல நாடுகளை கடந்து இந்தியாவை அடையும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்யாவில் தொடங்கும் இந்த ரயில் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை கடந்து இந்தியாவை அடையுமாம். இந்த ரூட் குறித்து பரிசீலனை நடத்தப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதேநேரம் இந்த ரூட்டில் தான் நிச்சயம் ரயில் பாதை வேண்டும் என தாங்கள் கூறவில்லை என்றும் இந்தியாவை அடையும் எந்தவொரு வழித்தடத்தையும் பரிசீலிக்க தயாராக இருப்பதாக குஸ்னுலின் தெரிவித்துள்ளார்.

ஏன் முக்கியம்

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாகும். சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதமும், என்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதமும் இந்த ஜலசந்தி வழியாகவே கடந்து செல்கிறது. இதேபோல் துருக்கியில் உள்ள போஸ்பரஸ் ஜலசந்தியும் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கடல் வழித்தடங்களில் போர், அரசியல் பதற்றம் அல்லது போக்குவரத்து தடைகள் ஏற்பட்டால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படலாம். இதன் காரணமாகவே கடல் போக்குவரத்தை மட்டும் நம்பி இல்லாமல் இருக்க இதுபோல மாற்று வழிகளை ரஷ்யா ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவுக்கும் உதவும்!

இந்த திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவுக்கும் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெறலாம். ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே நிலவழி சரக்கு போக்குவரத்து இணைப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்படும். மேலும், மத்திய ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் போக்குவரத்து தொடர்புகளும் வலுப்பெறலாம். குறிப்பாக, கடல் வழித்தடங்களை மட்டும் சார்ந்திருக்காமல், நிலம் வழியாக பொருட்களை கொண்டு செல்லக்கூடிய மற்றொரு வாய்ப்பு உருவாகும். மேலும், ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான சுற்றுலாவும் கணிசமாக உயரும்.

எனினும், உடனடியாக ரஷ்யா இந்தியாவை இணைக்க ரயில் பாதை போடுவார்கள் என்று கூற முடியாது. இப்போது இது வெறும் முன்மொழிவாகவே இருக்கிறது. இதன் பிறகு சாத்தியக்கூறு அறிக்கை, வழித்தடம், பட்ஜெட் என ஏகப்பட்ட பிராசஸ் இருக்கிறது. மேலும், இதுவரை இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூட வெளியாகவில்லை. எனவே, இது வெறுமன முன்மொழிவாக மட்டுமே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+